அதிமுக பொதுக்குழு கூட்ட வாயிலில் தள்ளுமுள்ளு; ஏராளமானோர் ஒரே நேரத்தில் நுழைந்ததால் பரபரப்பு


அதிமுக பொதுக்குழு கூட்ட வாயிலில் தள்ளுமுள்ளு;  ஏராளமானோர் ஒரே நேரத்தில் நுழைந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Dec 2025 11:04 AM IST (Updated: 10 Dec 2025 12:39 PM IST)
t-max-icont-min-icon

பொதுக்குழு கூட்டம் தொடங்கும் முன்பாக நுழைவு வாயிலில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதிமுகவின் அவைத் தலைவர் தமிழ் உசேனுக்கு திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதால் அவர் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், தற்காலிக அவைத் தலைவராக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியை நியமித்த இபிஎஸ், அவர் தலைமையில் பொதுக்குழு நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இதன்படி, கேபி முனுசாமி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பொதுக்குழு கூட்டம் தொடங்கும் முன்பாக நுழைவு வாயிலில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி வேனில் உள்ளே சென்ற நிலையில், ஒரே நேரத்தில் அதிமுகவினர் உள்ளே செல்ல முற்பட்டனர். இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருசிலர் தடுமாறி கீழே விழுந்து பிறகு, எழுந்து சென்றனர். இந்த நிகழ்வால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story