"சீமான் எங்களுக்கு தூசு மாதிரி.. அவர் ஒரு பிரச்சினையே கிடையாது" - அமைச்சர் ரகுபதி


சீமான் எங்களுக்கு தூசு மாதிரி.. அவர் ஒரு பிரச்சினையே கிடையாது  - அமைச்சர் ரகுபதி
x
தினத்தந்தி 2 March 2025 8:53 AM (Updated: 2 March 2025 9:18 AM)
t-max-icont-min-icon

சீமான் விவகாரத்தில் திமுக பின்புலத்தில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், "சீமான் மீதான வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. புகார்தாரரான பெண்மணி ஏற்கனவே சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த வழக்கில் தி.மு.க.வின் பின்புலம் இருப்பதாக கூறப்படுவது முற்றிலும் தவறு.

சீமானை சமாளிக்கிறது எல்லாம் எங்களுக்கு தூசு மாதிரி. அவர் ஒரு பிரச்னையே கிடையாது. நாங்கள் இதில் தலையிடவில்லை. இந்த வழக்கில் நாங்கள் தலையிட்டிருந்தால், அதை எளிதில் திசை திருப்பி இருக்க முடியும். ஆனால் நாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை.

சீமான் தான் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோர்ட்டை நாடினார். ஐகோர்ட்டின் உத்தரவின்படி தான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இதிலிருந்தே தி.மு.க.வுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது. சீமான் மீது 72க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது. எல்லா வழக்குகளையும் ஒரே கோர்ட்டில் விசாரிக்க வேண்டும் என்று கோர்ட்டு கூறியிருக்கிறது. நிச்சயமாக அப்படியே நடக்கும்" என்று அவர் கூறினார்.

1 More update

Next Story