செங்கோட்டையன் - நாஞ்சில் சம்பத் சந்திப்பு


செங்கோட்டையன் - நாஞ்சில் சம்பத் சந்திப்பு
x

சென்னையில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை,

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் த.வெ.க. தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை அமைத்து பணியாற்றி வருகிறார். கட்சியில் உறுப்பினர் சேர்க்கை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், மறுபக்கம் மக்கள் சந்திப்பு, அரசியல் நகர்வுகளில் விஜய்யும், கட்சியின் மாநில நிர்வாகிகளும் தீவிரமாக செயலாற்றுகின்றனர்.

தேர்தல் நெருங்கிவரும் சூழலில், கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும், தேர்தல் களப் பணிகளை சீரிய முறையில் முன்னெடுக்கும் வகையில் கட்சி ரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல், கட்சி தொடர்பான பணிகளை முடுக்கிவிடும் விதமாக முக்கிய நிர்வாகிகள் கூடி ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை அவ்வப்போது செய்கின்றனர்.

அந்த வகையில், இன்று தவெக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை நிலைய செயலகத்தில் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், சமீபத்தில் கட்சியில் இணைந்த த.வெ.க. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். தேர்தல் கூட்டணி, கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக சமீபத்தில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் இருவரும் சந்தித்து பேசினர். அப்போது ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். இருவரும் அதிமுகவில் நிர்வாகிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் செய்தியாளர்களிடம் நாஞ்சில் சம்பத் கூறுகையில், “விமர்சனங்களால் வளர்ந்தவன்.. கனவுகளோடு களத்துக்கு வருகிறேன்” என்று கூறினார்.

1 More update

Next Story