11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை


11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
x

கோப்புப்படம் 

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவை சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி ஆடு மேய்ப்பதற்காக அருகில் உள்ள வயலுக்கு சென்றார். அப்போது ஒரு ஆடு காணாமல் போய்விட்டதால் அதை தேடி சிறுமி சென்றார். அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த வாலிபர், பக்கத்தில் உள்ள பருத்தி வயலுக்கு ஆடு சென்று இருப்பதாக கூறி அந்த சிறுமியை அழைத்து சென்றார்.

அப்போது அந்த சிறுமியை வாலிபர் கட்டிபிடித்து, ஆடையை அவிழ்க்க சொன்னபோது அந்த சிறுமி சத்தம்போட்டு அழுதார். உடனே சத்தம் கேட்டு பக்கத்து வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தவர் ஓடி வந்து, யாரு நீ என்று கேட்டவுடன் அந்த சிறுமியை விட்டுவிட்டு வாலிபர் ஓடிவிட்டார். இது குறித்து சிறுமியின் தந்தை நாச்சியார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வாக்குப்பதிவு செய்து கூகூர் வடகரையை சேர்ந்த சதீஷ்குமாரை (24 வயது) கைது செய்தனர்.

பின்னர் அவரை தஞ்சை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி தமிழரசி விசாரணை செய்து சதீஷ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

1 More update

Next Story