சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை - நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு


சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை - நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு
x

கோப்புப்படம் 

தொழிலாளி, சிறுமியை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கடியப்பட்டினம் கல்லடிவிளையை சேர்ந்தவர் வினோத் (31 வயது), தொழிலாளி. இவர் நெய்யூர் பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார். அதே பகுதியில் 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 22.5.2020 அன்று சிறுமி தனது வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அங்கு சென்ற வினோத், சிறுமியிடம் நைசாக பேசி தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இந்த விஷயத்தை வெளியே கூறினால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.

ஆனால் சிறுமி, தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவிலில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரய்யா நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட வினோத்திற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

1 More update

Next Story