பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை: ஜிம் மாஸ்டர் போக்சோவில் கைது

பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜிம் மாஸ்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை: ஜிம் மாஸ்டர் போக்சோவில் கைது
Published on

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கே.வேட்ரப்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன் (32 வயது). இவர் அரூர் திரு.வி.க. நகரில் 7 ஆண்டுகளாக ஜிம் மற்றும் பிட்னஸ் சென்டர் நடத்தி வருகிறார். ஜிம் சென்டருக்கு வந்த பெண் ஒருவரின் பிளஸ்-1 படிக்கும் மகளுடன் சிலம்பரசனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

கடந்த அக்டோபர் மாதம் அந்த மாணவி தனது தோழியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலம்பரசன் மாணவியை வீட்டில் விடுவதாக கூறி அவரை காரில் அழைத்து சென்றுள்ளார். ஆனால் சிலம்பரசன் மாணவியின் வீட்டிற்கு செல்லாமல் கடத்தூர் செல்லும் சாலையில் சென்றுள்ளார்.

பின்பு அவர் காரை நிறுத்திவிட்டு மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்கம் மருந்து கலந்து கொடுத்து பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என சிலம்பரசன் மாணவியை மிரட்டி உள்ளார். இந்த நிலையில் மாணவி தனக்கு நடந்த கொடுமைகளை தனது தாயாரிடம் கூறியுள்ளார்.

இது குறித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சிலம்பரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிலம்பரசனுக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com