எஸ்.ஐ.ஆர். எதிர்ப்பு: தூத்துக்குடியில் நாளை திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்


எஸ்.ஐ.ஆர். எதிர்ப்பு: தூத்துக்குடியில் நாளை திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
x

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (எஸ்.ஐ.ஆர்.) மூலம் தமிழ்நாட்டில் உள்ள உண்மையான வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிடுகிறது.

தூத்துக்குடி

திமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளர்களான அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "நாட்டில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் எஸ்ஐஆருக்கு தொடக்கம் முதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் கைப்பாவையாகவும், எதேச்சதிகாரப் போக்குடனும் தேர்தல் ஆணையம் செயல்பட்டு, தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (S.I.R.) கொண்டு வந்துள்ளது.

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (எஸ்ஐஆர்) மூலம் தமிழ்நாட்டில் உள்ள உண்மையான வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிடுகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் உச்ச காலமான, கனமழை மற்றும் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படும் காலத்தில் தமிழ்நாடு வாக்காளர்களில் பெரும்பாலோர் கிராமப்புற மக்களாக, விவசாயிகளாக இருப்பதால், Enumeration Form-களைப் பெற்று நிரப்பி, திருப்பி அளிக்க நேரம் கிடைக்காது. இந்த செயல்முறையில் பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்படுவர்.

அதோடு, வருவாய்த் துறையும் கனமழையால் எழும் சூழ்நிலைகளைக் கையாள்வதில் ஈடுபட வேண்டும். எனவே, இந்த காலம் Enumeration-க்கு உகந்த காலம் இல்லை என்று மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் தனித்தனியே அறிக்கை விடுத்தும், அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இந்த எஸ்ஐஆர் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் எதிர்பார்த்தவாறே நவம்பர் 4-ம் தேதியில் இருந்து இன்று வரை களத்தில் எஸ்ஐஆர், பெரும்பாலான வாக்காளர்கள் நீக்கப்படும் அச்சத்தை உறுதிப்படுத்துகிறது.

எனவே, இந்த எஸ்ஐஆர் சீராய்வை தேர்தல் ஆணையம் உடனே கைவிடும்படி தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்தும், அதனை செவிமடுக்காத மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி, எதேச்சதிகாரப் போக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (எஸ்ஐஆர்) கொண்டு வந்துள்ளதை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் நாளை (நவம்பர் 11ம் தேதி, செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம், விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்".

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story