திருச்செந்தூரில் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை நிறுவ உதவிய கல்லூரி மாணவர்களுக்கு எஸ்.பி. பாராட்டு


திருச்செந்தூரில் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை நிறுவ உதவிய கல்லூரி மாணவர்களுக்கு எஸ்.பி. பாராட்டு
x

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்காக மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் முன்னெடுப்பில் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்காக மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் முன்னெடுப்பில் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டது.

இந்த டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறையில் நிகழ்நேர வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்தை நேரடியாக கண்காணித்தல் (Real-time Traffic and Parking Monitoring), பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகளை அறிந்து கொள்வதற்காக காவல்துறையினரின் May I Help You மையம், மருத்துவ முகாம்கள், குடிநீர் வசதி செய்யபட்ட இடங்கள், நடமாடும் கழிப்பறைகள், ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ள இடங்கள் ஆகியவற்றை கண்டறிய "AIட்டையா Chatbot" என்னும் டிஜிட்டல் தொழில்நுட்பமும் நிறுவப்பட்டது.

மேற்சொன்ன 2 டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உருவாக்க உதவிய நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி, பண்ணாரி அம்மன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி ஆகிய கல்லூரிகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை நேற்று மாவட்ட எஸ்.பி., மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நினைவுப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

1 More update

Next Story