நெல்லையில் கீழே கிடந்த ரூ.2.50 லட்சத்தை போலீசிடம் ஒப்படைத்தவருக்கு எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டு

சேரன்மகாதேவி பஸ்ஸ்டாண்ட் அருகே டீ கடை நடத்தி வருபவர், அவரது கடை முன்பு, ஒரு பேக்கில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணம் கேட்பாரற்ற நிலையில் இருப்பதை பார்த்துள்ளார்.
நெல்லையில் கீழே கிடந்த ரூ.2.50 லட்சத்தை போலீசிடம் ஒப்படைத்தவருக்கு எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டு
Published on

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பஸ்ஸ்டாண்ட் அருகே டீ கடை நடத்தி வரும் கிருஷ்ணன் (வயது 57) என்பவர் 30.11.2025 அன்று தனது கடையின் முன்பு, ஒரு பேக்கில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணம் கேட்பாரற்ற நிலையில் இருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக அந்த பேக்கை எடுத்து, உரிய நபரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தில் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் வந்து நேர்மையான முறையில் ஒப்படைத்துள்ளார்.

பின் சேரன்மகாதேவி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சேரன்மகாதேவி, ரயில்வே லைன் தெருவை சேர்ந்த மாரியப்பன்(30) என்பவருடைய பணம் என்று தெரியவந்து, அவரை காவல் நிலையம் வரவழைத்து உரிய முறையில் அவரிடம் பணத்தை ஒப்படைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன், கிருஷ்ணனை நேரில் அழைத்து அவருடைய நேர்மையை பாராட்டும் வகையில் பொன்னாடை அணிவித்து பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கவுரவித்தார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com