ஐதராபாத்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில்; தெற்கு ரெயில்வே அறிவிப்பு


ஐதராபாத்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில்; தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தெலுங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, காச்சிகுடாவில் இருந்து மதுரைக்கு அக்டோபர் 20-ந் தேதி முதல் நவம்பர் 24-ந் தேதி வரை (திங்கட்கிழமை மட்டும்) சிறப்பு ரெயில் (வண்டி எண்-07191) இயக்கப்படுகிறது. அதே போல, மதுரையில் இருந்து காச்சிகுடாவிற்கு வருகிற 22-ந் தேதி முதல் நவம்பர் 26-ந் தேதி வரை (புதன்கிழமை மட்டும்) சிறப்பு ரெயில் (07192) இயக்கப்படுகிறது.

ஐதராபாத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு அக்டோபர் 15-ந் தேதி முதல் நவம்பர் 26-ந் தேதி வரை (புதன்கிழமை மட்டும்) சிறப்பு ரெயில் (07230) இயக்கப்படுகிறது. அதே போல, கன்னியாகுமரியில் இருந்து ஐதராபாத்திற்கு அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 28-ந் தேதி வரை (வெள்ளிக்கிழமை மட்டும்) சிறப்பு ரெயில் (07229) இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story