சென்னை-ஆந்திரா இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

எழும்பூரில் இருந்து சத்யா சாய் பி நிலையத்திற்கு வருகிற 23-ந் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவையொட்டி, பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர்- ஆந்திரா மாநிலம், ‘சத்யா சாய் பி' நிலையத்துக்கு, சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
அதன்படி, எழும்பூரில் இருந்து ‘சத்யா சாய் பி' நிலையத்திற்கு வருகிற 23-ந் தேதி சிறப்பு ரெயில் (வண்டி எண்-06065) இயக்கப்படுகிறது. அதே போல, ‘சத்யா சாய் பி' நிலையத்தில் இருந்து எழும்பூருக்கு 24-ந் தேதி சிறப்பு ரெயில் (06066) இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






