மாணவர்கள் வருகை பதிவு: சென்னை ஐகோர்ட்டு கருத்து


மாணவர்கள் வருகை பதிவு: சென்னை ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 19 Feb 2025 3:28 PM IST (Updated: 19 Feb 2025 4:11 PM IST)
t-max-icont-min-icon

வருகைப்பதிவு குறைவாக இருந்தால் தேர்வெழுத அனுமதிக்க முடியாது என மாணவரின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்டு.

சென்னை,

வருகைப் பதிவு குறைவால் பல்கலைக்கழக தேர்வு எழுத அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து, கல்லூரி மாணவர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று (பிப்.,19) விசாரணைக்கு வந்தது. வருகை பதிவு குறைவாக உள்ள மாணவர்களை தேர்வெழுத அனுமதிப்பது, முறையாக வருகை பதிவு இருக்கும் மாணவர்களை கேலிக்குள்ளாக்கிவிடும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து, கல்வி சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது என பலமுறை நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வருகைப் பதிவு குறைவாக இருக்கும் கல்லூரி மாணவர்களை தேர்வெழுத அனுமதிப்பது சரியான செயல் அல்ல என்றும் உரிய கட்டணத்தை செலுத்தி மீண்டும் படிப்பை தொடர மாணவர் விரும்பினால் அனுமதி அளிக்க பல்கலைக் கழகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் மாணவர் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

1 More update

Next Story