திடீர் பழுது... சென்னையில் நடுவழியில் நின்ற மெட்ரோ ரெயில்.!


திடீர் பழுது... சென்னையில் நடுவழியில் நின்ற மெட்ரோ ரெயில்.!
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 2 Dec 2025 7:59 AM IST (Updated: 2 Dec 2025 8:00 AM IST)
t-max-icont-min-icon

மின்சார கேபிளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரெயில் நடுவழியில் நின்றதாக கூறப்படுகிறது.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி மெட்ரோ ரெயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. சென்னை சென்ட்ரல் - உயர்நீதிமன்றம் இடையே சுரங்கப் பாதையில் மெட்ரோ ரெயில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென நடுவழியில் நின்றது.

மின்சார கேபிளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரெயில் நடுவழியில் நின்றதாக கூறப்படுகிறது. சுமார் 20 நிமிடங்கள் தாமதத்துக்கு பிறகு கோளாறு சரிசெய்யப்பட்டது. திடீரென மெட்ரோ ரெயில் நடுவழியில் நின்றதால், ரெயிலில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தொழில்நுட்பக் குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர்.

1 More update

Next Story