இலங்கை தமிழர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வேதனை தருகிறது - திருமாவளவன்

மனிதநேய மாண்பை உடைப்பதுபோல் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு உள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னை,
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தது தொடர்பான வழக்கு ஒன்றில், 'இந்தியா ஒன்றும் சத்திரமல்ல' என தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, மனுவை தள்ளுபடி செய்தது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்துக்கு விசிக தலைவர் திருமாவளவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக பேசியதாவது;
"இலங்கை தமிழர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வேதனை தருகிறது. மனிதநேய மாண்பை உடைப்பதுபோல் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு உள்ளது. புலம்பெயர்வது என்பது உலகம் முழுவதும் நடப்பது. இலங்கையில் இருந்து மட்டும் புலம்பெயர்கிறார்கள் எனபது கிடையாது. மனிதாபிமான அடிப்படையில் தஞ்சம் புகுவோருக்கு அடைக்கலம் கொடுப்பது தேசத்தின் கடமை. இந்தியா என்ன சத்திரமா என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது." என்றார்.
Related Tags :
Next Story






