தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு-தெற்கு ரெயில்வே அறிவிப்பு


தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு-தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சிறப்பு ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே நீட்டித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06035), வரும் ஜூன் 6-ந்தேதியும் (வெள்ளிக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06036) (ஞாயிற்றுக்கிழமை மட்டும்), வரும் ஜூன் 8-ந்தேதியும் ஒரு சேவை மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06012), வரும் ஜூன் 8-ந்தேதி முதல் 29-ந்தேதி வரையும் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் (06011), வரும் ஜூன் 9-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையும் (திங்கட்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரெயில் (06030), வரும் ஜூன் 8-ந்தேதி முதல் 29-ந்தேதி வரையும் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்), மறுமார்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06029), வரும் ஜூன் 9-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையும் (திங்கட்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story