முல்லை பெரியாறு அணையை கைப்பற்ற தொடர்ந்து வரும் மிரட்டல்.. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்


முல்லை பெரியாறு அணையை கைப்பற்ற தொடர்ந்து வரும் மிரட்டல்.. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்
x

அணை பலமாக இருக்கிறது, எந்த ஆபத்தும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி மற்றும் இந்திய கம்மியூனிஸ்டு கட்சி கூட்டாக விடுத்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

முல்லைப் பெரியாறு அணையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை ஒட்டி உடனடியாக கேரளா மாநில வெடிகுண்டு தடுப்பு நிபுணத்துவ குழுவினர் சென்று முழுமையாக ஆய்வு செய்ததில், அப்படி எதுவும் இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது புதிதல்ல....இப்படி பல தடவை புரளிகளாக வந்து, அது உண்மையில்லை என்று தெரிந்திருக்கிறது.

அணை பலவீனமாக உள்ளது, எந்த நேரத்திலும் உடைந்து போகலாம், கீழ்பகுதியில் இருக்கிற மாவட்டங்களில் வசிக்கிற எண்ணற்ற மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என திரும்பத் திரும்ப கூறி ... எப்படியாவது இந்த அணையை அப்புறப்படுத்திட, அம் மாநிலத்தில் இதற்காகவே உள்ள சில குழுக்களால் தொடர்ந்து எடுக்கப்படும் நடவடிக்கையே, இப்படியான புரளி செய்திகள் உலா வருகிறது.

இன்னும் பல்லாண்டுகளுக்கும் மேலே பலமான அணையாக இது இருக்கும் என நீரில் நிபுணர்கள் அறிவித்துள்ளனர். அணை பலவீனமாக உள்ளது என கேரளா அரசாலும்... கேரளா வில் உள்ள சில குழுக்களாலும் உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமும்,... உண்மை அறியும் குழுவில், தொழில் நுட்பகுழுவினரையும் இணைத்து அனுப்பி வைத்து ஆய்வறிக்கை கொடுக்க கோரியது.

ஒவ்வொரு ஆண்டும் இப்படியான குழுக்கள் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கைகளை கொடுத்த தில்...அணை பலமாக இருக்கிறது, எந்த ஆபத்தும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் குழுவினரின் அறிக்கையை ஏற்ற நீதிமன்றம்... பேபி அணை கட்டுமானம் முடிந்த பின் 142 அடியாக முழு கொள்ளளவு நீரை முல்லை பெரியார் அணையில் தேக்கலாம்.. பேபி அணை கட்டுமானத்திற்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்திட வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனாலும் கேரளாவோ....இதற்கு ஒத்துழைக்காமல்... பேபி அணை கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்வதை முடக்கும் நிலையில் .. தொடர்ந்து முரண் நிலையிலேயே செயல்பட்டு வருகிறது.

முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக கீழ் பகுதியில் புதிய அணையை கட்டி, மின் உற்பத்தி செய்திட வேண்டும் என்ற தொலை நோக்கு திட்டத்தில் தான்... தொல்லையையே தொடராக இம் மாவட்டங்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. முல்லைப் பெரியாறு அணை மூலம் விவசாயிகள் பாசனத்திற்கும்... நிலநீர் ஊற்று குடிநீரையும் நம்பியே உள்ள தமிழக மாவட்டங்களை பாதிப்பிற்குள்ளாக்கும் போக்கில் இவர் கள் முனைப்பாக உள்ளனர்.

இந்த நிலையில் தான்... முல்லைப் பெரியாறு அணையை நிர்வகித்து பராமரிக்கும் பொறுப்பை தமிழக அரசு வைத்திருப்பது கூடாது.... கேரளா அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இப்போது எழுப்பி வருகிறது. ஆக எப்படியாவது முல்லைப் பெரியாறு அணையை அப்புறபடுத்திட வேண்டும் என்பதற்கான பல்வேறு வழிகளை கையாள்கிறது. அங்குள்ள பல்வேறு நபர்கள், குழுக்கள் இதன் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டி கேரளா அரசை நிர்ப்பந்தம் செய்கின்றனர்.

இப்போக்கு தொடர்ந்தால் முல்லைப் பெரியாறு அணையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்கிற வகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான இயக்கம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story