பூந்தமல்லி- பரந்தூர் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்

கோப்புப்படம்
52.94 கி.மீ தூர மெட்ரோ ரெயில் திட்டத்தை இரு கட்டங்களாக செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை,
பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை 52.94 கி.மீ தூர மெட்ரோ ரெயில் திட்டத்தை இரு கட்டங்களாக செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக ரூ.8,779 கோடியில் பூந்தமல்லி- சுங்குவார்சத்திரம் வரை 27.கி.மீ தூரத்திற்கு மெட்ரோ உயர் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
பரந்தூரில் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையம், திருமழிசையில் முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Related Tags :
Next Story






