பெண்களுக்கு தமிழகம் பாதுகாப்பான மாநிலம் - கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு


பெண்களுக்கு தமிழகம் பாதுகாப்பான மாநிலம் - கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு
x

கல்வி, கலாச்சாரம், விருந்தோம்பல் அனைத்திலும் தமிழகம் சிறந்து விளங்குவதாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சென்னை,

கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;

கல்வி, கலாச்சாரம், விருந்தோம்பல் அனைத்திலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெற்றோர் தங்கள் மகள்களை தமிழ்நாட்டுக்கு படிக்க அனுப்பும்போது பாதுகாப்பாக உணர்கின்றனர். இதனால் தமிழ்நாட்டுக்கு அதிகமான பெண்கள் படிக்க வருகின்றனர். இதுபோன்ற பாதுகாப்பான சூழல் டெல்லியில் இல்லை.

பெண்களுக்கு டெல்லி பாதுகாப்பற்றதாக நினைக்கும் வடகிழக்கு மாநிலத்தவர், தமிழ்நாட்டை பாதுகாப்பானதாக கருதுகின்றனர். அரசியல் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் சாதிய சண்டைகள் அதிகம் நிகழ்கின்றன. இது மிகுந்த வருத்தமளிக்கிறது. என தெரிவித்தார்.

தமிழ்நாடு கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்றதில் இருந்து அவர் பேசிய கருத்துகள் தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக கவர்னர் புகழ்ந்து பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

1 More update

Next Story