அதிமுகவிடம் பதற்றம் வெளிப்படுகிறது: திருமாவளவன்


அதிமுகவிடம் பதற்றம் வெளிப்படுகிறது: திருமாவளவன்
x
தினத்தந்தி 25 May 2025 10:29 AM (Updated: 25 May 2025 10:30 AM)
t-max-icont-min-icon

விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

திருச்சி,

விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

ஏற்கனவே நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாள போராட்டம். அதுவே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றில்லை.

தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தவறுவதால் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை தர மாட்டோம் என அடம் பிடிக்கிறார்கள். இது ஒரு எதேச்சதிகாரப் போக்கு. இவ்வாறு தடுத்து வைத்திருப்பதை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்பதை நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார். இது தமிழக மக்கள் நலனுக்கு உகந்த அணுகுமுறை. இதை விமர்சிப்பது முற்றிலும் அரசியல் உள்நோக்கமுடையது. அரசியல் உள் நோக்கத்தோடு விமர்சிக்கும் போது எதையும் காரணமாக சொல்லலாம்.

பா.ஜ.க., தி.மு.க.வோடு நெருங்கி விடக்கூடாது. நல்ல இணக்கத்தை உருவாக்கி விடக்கூடாது என்கிற பதட்டம் அ.தி.மு.க.விடம் வெளிப்படுகிறது. தி.மு.க. மதச்சார்பற்ற கூட்டணியை தலைமை தாங்கி நடத்தும் போது அத்தகைய வரலாற்று பிழையை செய்யாது என்பது தமிழக மக்கள் உணர்ந்த உண்மை. அது எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும், ஆனால் தி.மு.க. மீது ஒரு சந்தேகத்தை எழுப்ப வேண்டும் என்பதற்காக இந்த விமர்சனத்தை முன்வைக்கிறார்."

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story