தஞ்சை: கும்பகோணம் அருகே சுவர் இடிந்து இளம்பெண் பலி; 3 பேர் காயம்

தஞ்சை கும்பகோணம் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் இளம்பெண்ணின் தந்தை, தாய், சகோதரி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து உள்ளனர்.
தஞ்சை,
டிட்வா புயலால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்ட பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருவதுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. இந்நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே இரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, கனமழை மற்றும் பலத்த காற்று வீசியதில் சுவரின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் சிக்கி, வீட்டில் இருந்த ரேணுகா (வயது 20) என்பவர் பலியானார். அவருடைய தந்தை, தாய், சகோதரி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இளம்பெண் ரேணுகாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.
Related Tags :
Next Story






