அரசின் நடவடிக்கையால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை - அமைச்சர் சேகர்பாபு


அரசின் நடவடிக்கையால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை - அமைச்சர் சேகர்பாபு
x

சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை,

சென்னையில் நேற்று முதல் பெய்து வரும் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வரும் நிலையில், மழையால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை இன்று இரவு வரை நீடிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மழை நிலவரம் குறித்து சென்னை சத்யா நகரில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இதன் பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது;

”சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின் மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மழை நிற்கும் வரை மக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை.”

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story