11-ம் வகுப்பில் பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்திருப்பது தவறான முடிவு - ரவிக்குமார் எம்.பி.


11-ம் வகுப்பில் பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்திருப்பது தவறான முடிவு - ரவிக்குமார் எம்.பி.
x

கோப்புப்படம் 

மாநில கல்விக் கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.

சென்னை

மத்திய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழக அரசு தொடர்ந்து கூறிவரும் நிலையில், கல்வி வளர்ச்சிக்கு வழங்கும் நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில், மாநில கல்விக் கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். அதில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்படும். இந்த ஆண்டு முதல் 11-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 11-ம் வகுப்பில் பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்திருப்பது தவறான முடிவு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இன்று வெளியிடப்பட்டிருக்கும் மாநிலக் கல்விக் கொள்கையில் 11-ம் வகுப்பில் பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்திருப்பது தவறான முடிவு. இது மேல்நிலைக் கல்வியை மட்டுமின்றி உயர்கல்வியின் தரத்தையும், தொழிற்கல்வியின் தரத்தையும் கெடுத்துவிடும். தமிழ்நாடு முதல்-அமைச்சர் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story