செம்மொழிகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு நிதியை வழங்குவதில்லை - கனிமொழி எம்.பி.


செம்மொழிகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு நிதியை வழங்குவதில்லை -  கனிமொழி எம்.பி.
x

ஒரு காலத்தில் படிப்பு மறுக்கப்பட்டது; அதற்கு பின்னால் இருந்த வலி இப்போது தெரிய வேண்டும் என்று கனிமொழி கூறினார்.

சென்னை,

‘தமிழால் இணைவோம், தரணியை வெல்வோம்' விழாவில் தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி பேசியதாவது:-

செழுமையான பாரம்பரியத்தையும், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பேசப்படும் மொழியாகவும் இருந்தபோதிலும், தமிழ் போன்ற செம்மொழிகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு போதுமான நிதியை வழங்குவதில்லை. இந்த நிகழ்வே உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.

தங்கள் தாய்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் வசித்தாலும், தமிழர்கள் தங்கள் மொழியையும் அடையாளத்தையும் பாதுகாத்து வருவதைக் காண்பது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு காலத்தில் படிப்பு மறுக்கப்பட்டது. அதற்கு பின்னால் இருந்த வலி இப்போது தெரிய வேண்டும். உலக தமிழர்களின் கோரிக்கையை ஏற்று இந்த நிகழ்ச்சி நடக்கிறது. அயலகத் தமிழர் நாளை சிறப்பாக கொண்டாடுகிறோம்

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு கனிமொழி எம்.பி. நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

1 More update

Next Story