இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும்: விஜய்


தினத்தந்தி 21 Aug 2025 8:32 AM IST (Updated: 21 Aug 2025 7:23 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.


Live Updates

  • 21 Aug 2025 8:35 AM IST

    வித்தியாசமான குடிநீர் வசதி

    மாநாட்டு திடலில், இரவை பகலாக்கும் வகையில் 200-க்கும் மேற்பட்ட உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விசாலமான பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, இருசக்கர வாகனங்களில் வர வேண்டாம் என்றும், கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் வரவேண்டாம் எனவும் கட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஏற்பாட்டு பணிகளை ஏராளமான மக்கள் நேற்றே பார்வையிட வந்தனர். இரவு முழுவதும் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

    மற்ற கட்சிகளிடம் இருந்து வித்தியாசத்தை காண்பிக்கும் வகையில் த.வெ.க. மாநாட்டில் சில வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதில் குறிப்பாக, தொண்டர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில், ‘ஆரே வாட்டர் பிளாண்ட்’ மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இதற்காக நிலத்திற்கு அடியில் சுமார் 8 ஆயிரம் மீட்டர் தூரத்திற்கு பைப்புகள் பதிக்கப்பட்டு உள்ளன. நிறைய குடிநீர் நல்லிகள் அவற்றில் பொருத்தி இருப்பதால், எந்த இடத்தில் இருந்தும் குடிதண்ணீர் பெறும் வகையில் வசதி உள்ளது.

  • 21 Aug 2025 8:33 AM IST

    தவெக 2-வது மாநில மாநாடு: நொடிக்குநொடி குவியும் தொண்டர்கள்


    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து, தீவிர களப்பணி ஆற்றுகிறார்கள்.

    2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது.

    இதற்காக மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி பகுதியில் 506 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

    மாநாட்டு மேடையின் உச்சியில் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது” என்று குறிப்பிட்டு அண்ணா, எம்.ஜி.ஆர்., விஜய் படங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. தொண்டர்களை நடந்து சென்று விஜய் பார்க்கும் வகையில், சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு ‘ரேம்ப் வாக்’ நடைமேடை அமைக்கப்பட்டு உள்ளது.

    அதன் இருபுறமும், 40-க்கும் மேற்பட்ட போக்கஸ் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. விஜய் மேடையில் நடந்து வரும் போது, முதல் அடுக்கில் பவுன்சர்கள், 2-வது அடுக்கில் போலீசார் என இரண்டடுக்கு பாதுகாப்பு ஏற்பாடும் உள்ளது.

1 More update

Next Story