புதிய கட்சி ஆரம்பித்தவர்கள் காணும் கனவு தவிடுபொடியாகும் - அமைச்சர் பொன்முடி


புதிய கட்சி ஆரம்பித்தவர்கள் காணும் கனவு தவிடுபொடியாகும் - அமைச்சர் பொன்முடி
x

அரசியலுக்கு வந்த நடிகர்கள் பலர் ஏமாற்றமடைந்துள்ளனர் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

ஈரோடு இடைத்தேர்தலில் டெபாசிட் இழப்போம் என்பதை அறிந்தே அமாவாசை கனவு கொண்டிருக்கிற எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜனதாவும் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. நம்ம ஊரில் (விழுப்புரம்) மாநாடு நடத்தி, ஒருவர் கட்சி தொடங்கியதோடு, பரந்தூரில் மக்களை சந்தித்துள்ளார். இருக்கிற தொழிலை விட்டு அரசியலுக்கு வந்த நடிகர்கள் பலர் ஏமாற்றமடைந்துள்ளனர்.

அப்போதெல்லாம் இருந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர். போன்றோர்கள் கொள்கை பிடிப்போடு கழகத்தில் இணைந்து செயலாற்றி வந்தனர். அப்படி இல்லாதவர்கள் இன்றைக்கு திடீரென்று கட்சி ஆரம்பித்து முதல்-அமைச்சராகி விடலாம் என கனவு காண்கின்றனர். அவர்களின் கனவுகளெல்லாம் தவிடு பொடியாகிவிடும். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story