கோவை: மாணவிக்கு தீண்டாமை நடைபெறவில்லை - ஏஎஸ்பி சிருஷ்டி சிங்

பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக ஏஎஸ்பி சிருஷ்டி சிங் கூறியுள்ளார்.
கோவை,
கோவை மாட்டம் செங்குட்டைபாளையம் பகுதியில் உள்ள சித்பவனானந்தா பள்ளியில் பூப்பெய்திய மாணவிவை வெளியே உட்கார வைத்த விவகாரம் தொடர்பாக பள்ளியில், மாவட்ட பள்ளிக் கல்வி உதவி இயக்குனர் வடிவேல் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்தநிலையில்,
முதல் மாதவிடாய் ஏற்பட்ட பட்டியலின மாணவியை தனியே அமர வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஏஎஸ்பி சிருஷ்டி சிங் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
கோவை தனியார் பள்ளியில் மாணவிக்கு தீண்டாமை நடைபெறவில்லை. தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி தனியே அமர வைக்க மாணவியின் தாய் கோரிக்கை விடுத்தது தொடர்ந்து அவரை தனியாக அமர வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.தனியாக அமர வைக்க கூறினேனே தவிர, வெளியே தரையில் அமர வைக்க கூறவில்லை' என தாய் கூறியுள்ளார். இதனிடையே பள்லி முதல்வர் ஆனந்தியை தற்காலிக பணி நீக்கம் செய்து பள்ளியின் தாளாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.