எனது ஆசை வெகுவிரைவில் நிறைவேறும் - செங்கோட்டையன் நம்பிக்கை

மீண்டும் அதிமுகவில் இணைவது குறித்து தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்று செங்கோட்டையன் கூறினார்.
மதுரை,
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது நல்ல முடிவாக இருக்கும். நான் பா.ஜனதா தலைவர்களை நேரில் பார்த்தேன். அப்போது பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டன.
அதனை இங்கு பகிர்வது அரசியல் நாகரிகமாக இருக்காது. பா.ஜனதா தரப்பில் அழைக்கப்பட்ட பிறகுதான் டெல்லி சென்றேன் என சொன்னேன். ஒரு முறை அழைத்தார்கள், 2-வது முறை நானே சந்தித்தேன். மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவது குறித்து தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.
டி.டி.வி.தினகரனுடன் இணைந்து விஜய்யுடன் கூட்டணி அமைக்க போவது குறித்தும், கூட்டணி குறித்த எந்த கருத்தும் சொல்ல இயலாது. எல்லோரும் ஒருங்கிணைய வேண்டும் என்பதே ஆசை. அந்த ஆசை நிறைவேறும் காலம் வெகுவிரைவில் உள்ளது. ஒருங்கிணைப்பு நடைபெறுவது குறித்து பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.






