திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணி நாளை தொடக்கம்


திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணி நாளை தொடக்கம்
x

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

திருவாரூர்

வங்கக்கடலில் டிட்வா புயல் நிலவி வருகிறது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் விளைநிலங்களில் மழைநீர் புகுந்து நெல்,வாழை உள்பட பல்வேறு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருவாரூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணி நாளை தொடக்கம் என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது.

வேளாண்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்க உள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெடுத்து அதன் அறிக்கையை தமிழக அரசுக்கு தாக்கல் செய்ய உள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் இழப்பீடு உள்பட பல்வேறு அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story