ராஜபாளையம் அருகே கோவில் காவலாளிகள் கொலையில் கைதான வாலிபருக்கு கை, காலில் மாவுக்கட்டு


ராஜபாளையம் அருகே கோவில் காவலாளிகள் கொலையில் கைதான வாலிபருக்கு கை, காலில் மாவுக்கட்டு
x

கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை தென்காசி சாலையில் உள்ள தேவி ஆற்றுப்பாலம் அருகே மறைத்து வைத்திருப்பதாக கூறியுள்ளார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் கிராமத்தில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் காவலாளிகளாக அந்த பகுதியை சேர்ந்த சங்கர பாண்டியன் (வயது54), பேச்சிமுத்து (60) ஆகிய 2 பேர் பணியாற்றி வந்தனர்.

சம்பவத்தன்று நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்து காவலாளிகள் 2 பேரையும் வெட்டிக்கொன்று உண்டியலை உடைத்து, வெள்ளி பொருட்களை சேதப்படுத்திவிட்டு கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (25) என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் முனியசாமி (35) என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரிடம் சேத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை தென்காசி சாலையில் உள்ள தேவி ஆற்றுப்பாலம் அருகே மறைத்து வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை அழைத்துக் கொண்டு போலீசார் அங்கு சென்றனர். அங்கு மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் மற்றும் கண்காணிப்பு கேமராவுக்கான ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை கைப்பற்றினர்.

அப்போது அங்கிருந்து திடீரென தப்ப முயன்ற முனியசாமி அங்குள்ள பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் அவருக்கு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே அவரை போலீசார் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1 More update

Next Story