திருநெல்வேலி - டெல்லி சிறப்பு ரெயில் அறிவிப்பு


திருநெல்வேலி - டெல்லி சிறப்பு ரெயில் அறிவிப்பு
x

டெல்லி மற்றும் ராஜஸ்தானிற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி,

திருநெல்வேலியில் இருந்து டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06161) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் 21 ஏப்ரல் 2025 அன்று (நாளை) இரவு 10.15 மணியளவில் புறப்படும்.

ரெயில் அமைப்பு: 20- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2- இரண்டாம் வகுப்பு பெட்டிகள் உள்ளன.

மதுரை-பகத் கி கோதி

மதுரையில் இருந்து பகத் கி கோதி செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06067) ஏப்ரல் 21, 2025 அன்று (நாளை) காலை 10.45 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும்.

மறுமார்க்கத்தில் ராஜஸ்தான் பகத் கி கோதியில் இருந்து மதுரை செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06067) ஏப்ரல் 21, 2025 அன்று (நாளை) காலை 5.30 மணிக்கு பகத் கி கோதியில் இருந்து புறப்படும்.

ரெயில் அமைப்பு: 12- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 6- ஏசி மூன்று அடுக்கு எகானமி பெட்டிகள் மற்றும் 2- லக்கேஜ் கம் பிரேக் வேன் உள்ளன.

1 More update

Next Story