இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-07-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-07-2025
x
தினத்தந்தி 11 July 2025 9:16 AM IST (Updated: 12 July 2025 9:49 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 11 July 2025 10:52 AM IST

    சட்டமன்ற தேர்தலில் பாமக கூட்டணி சேரும் அணி மிகப்பெரிய வெற்றிபெறும் - ராமதாஸ்


    மயிலாடுதுறையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ராமதாஸ் பேசுகையில், “உங்களுக்காகத்தான் நான் இருக்கிறேன். உங்களை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை. பாமக எந்த அணியுடன் கூட்டணி சேருகிறதோ அந்த அணி மிகப்பெரிய வெற்றி பெறும். தேர்தல் ஆணையத்தை அணுகும் விவகாரத்தில் இனி முறையாக, தெளிவாக நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் அனைத்தும் சரியாக முறையாக நடைபெறும்” என்று அவர் கூறினார். 


  • 11 July 2025 10:24 AM IST

    மகளிர் டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டங்களுக்கான இடங்கள் அறிவிப்பு


    ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி தொடங்கும் இந்த டி20 உலகக் கோப்பைத் தொடர் ஜூலை 5ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூலை 5-ம் தேதி இறுதிப்போட்டி லார்ட்ஸ் திடலில் நடைபெறுகிறது.


  • 11 July 2025 10:23 AM IST

    வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களுக்கு ரூ.1,067 கோடி நிதி


    வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1.066 கோடியே 80 லட்சத்தை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


  • 11 July 2025 10:11 AM IST

    தங்கம் விலை அதிரடி உயர்வு... இன்றைய நிலவரம் என்ன?


    இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,075-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.121-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.


  • 11 July 2025 10:08 AM IST

    27, 28-ம் தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி


    தமிழகத்தின் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு, வரும் 27, 28-ம் தேதிகளில் பிரதமர் மோடி வருகை தர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 11 July 2025 9:26 AM IST

    அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நீட்டிப்பு


    டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் பயிற்றுவிக்கப்படும் மூன்றாண்டு எல்.எல்.பி/ மூன்றாண்டு எல்.எல்.பி (ஹானர்ஸ்) சட்டப்படிப்பிற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வ்வ்வ்.டண்டலு.அச.இந்த வாயிலாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 25.07.2025 மாலை 05.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 11 July 2025 9:24 AM IST

    இன்றைய ராசிபலன் - 11.07.2025


    ரிஷபம்

    தந்தையுடன் இணக்கமுடன் இருந்தால் தங்களுக்கு நன்மை செய்வார். காதலர்களின் அன்பு பலப்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒரு பகுதிக் கடனை அடைத்து விடுவீர்கள். தேக ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

    அதிர்ஷ்ட நிறம் - நீலம்


  • 11 July 2025 9:19 AM IST

    பும்ராவுக்கு 10-க்கு 10 மதிப்பெண் கொடுப்பேன் - பாகிஸ்தான் வீரர்


    ஐ.பி.எல் முதல் சர்வதேச வரை அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஜஸ்ப்ரித் பும்ரா உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்வதாக பல ஜாம்பவான்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ஸ்விங் பந்துகளை துல்லியமாக வீசுவதில் பும்ரா மிகவும் சிறந்தவர் என்று பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி பாராட்டியுள்ளார்.


1 More update

Next Story