இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 14 Jan 2026 10:21 AM IST
சென்னை சங்கமம் திருவிழா: இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
- 14 Jan 2026 10:20 AM IST
ரெயில் ஒன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3% கட்டண சலுகை: இன்று முதல் அமல்
ரெயில் ஒன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகையை ரெயில்வே அறிவித்துள்ளது.
- 14 Jan 2026 10:19 AM IST
போகி கொண்டாட்டம்.. சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு சராசரி அளவில் இருந்து உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 14 Jan 2026 10:18 AM IST
பொங்கல் பரிசு தொகுப்பு இன்றும் வழங்கப்படும்
ரேஷன் கடைகளில் கைரேகை சரியாக பதிவாகாத முதியவர்களுக்கு கண் கருவிழி மூலம் சரிபார்த்து பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. முதியவர்களின் கைரேகைகள் சரியாக பதிவு ஆகாததால் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- 14 Jan 2026 10:17 AM IST
இடைநிலை, பகுதி நேர ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பேச்சுவார்த்தை
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லாமல் போராடுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
- 14 Jan 2026 10:15 AM IST
சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை.. ஜோதி வடிவில் காட்சி தரும் அய்யப்பன்
சபரிமலையில் முத்தாய்ப்பு நிகழ்வாக இன்று (ஜனவரி 14), மகரவிளக்கு பூஜையும், அதைத் தொடர்ந்து மகரஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது.
இதையொட்டி கடந்த 2 நாட்களாக தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் சுத்திகிரியை பூஜைகள் நடந்தது. கோவிலில் நேற்று முன்தினம் பிரசாத சுத்தி பூஜைகளும், நேற்று பிம்ப சுத்தி பூஜையும் நடந்தது.
இன்று வழக்கமான பூஜைகளுடன் பிற்பகல் 3.08 மணிக்கு மகர சங்கிராந்தி எனப்படும் மகர சங்கிரம சிறப்பு பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். தந்திரி கண்டரு மகேஷ் மோகன் மற்றும் மேல்சாந்தி இ.டி.பிரசாத் நம்பூதிரி ஆகியோர் தலைமையில் இந்த பூஜைகள் நடைபெற உள்ளது.
- 14 Jan 2026 10:14 AM IST
“பழையன கழிதலும் புதியன புகுதலும்..” - பிறந்தது போகி
பழைய பொருட்களை வீதியில் கொட்டி எரித்தும், மேளத்தை இசைத்தும் போகி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
- 14 Jan 2026 10:13 AM IST
இன்றைய ராசிபலன் (14.01.2026): நண்பர்கள் கை கொடுப்பர்...!
கன்னி
வழக்கு சாதகமாக முடியும். தேவைக்கேற்ப பணம் வரும். மருத்துவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். பேச்சில் இனிமை கூடும். திருமணப் பேச்சு வார்த்தையைத் துவங்குவீர்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

















