இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025
x
தினத்தந்தி 15 July 2025 9:28 AM IST (Updated: 16 July 2025 9:13 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 15 July 2025 11:53 AM IST

    சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் 8-வது நாளாக போராட்டம்


    இந்நிலையில், பகுதிநேர சிறப்பு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் காலவரையற்ற போராட்டம் நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம் அருகே கடந்த 8-ம் தேதி தொடங்கியது. இப்போராட்டம் இன்று 8-வது நாளாக நீடித்தது. இந்தநிலையில், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் கையில் பதாகைகளை ஏந்தி முழுக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென அவர்கள் கூட்டமாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.


  • சேலத்தில் இளைஞர் வெட்டி படுகொலை
    15 July 2025 11:39 AM IST

    சேலத்தில் இளைஞர் வெட்டி படுகொலை

    சேலத்தில் தூத்துக்குடியை சேர்ந்த மதன்(28) என்பவர் காவல்நிலையம்அருகே உள்ள உணவகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு வந்த‌வர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 6 பேர் கொண்டகும்பலுக்கு போலீசார் வலைவீசி தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 

  • 10 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் ரெயில்கள்
    15 July 2025 11:31 AM IST

    10 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் ரெயில்கள்

    திருவள்ளூரில் சரக்கு ரெயில் விபத்து நடந்த பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு 10 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும். அரக்கோணம் - சென்னை இரு மார்க்கமாக செல்லக்கூடிய ரெயில்கள் கடம்பத்தூர் முதல் திருவள்ளூர் வரை 6 முதல் 10 கி.மீ. குறைந்த வேகத்தில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  • பயிற்சியில் ஈடுபடும் சுரேஷ் ரெய்னா
    15 July 2025 11:23 AM IST

    பயிற்சியில் ஈடுபடும் சுரேஷ் ரெய்னா

    வரும் 18ம் தேதி தொடங்கவுள்ள உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட் தொடருக்கான வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் சுரேஷ் ரெய்னா.

  • பெருந்தலைவரின் பெரும்புகழை போற்றுகிறேன் - எடப்பாடி பழனிசாமி
    15 July 2025 11:16 AM IST

    பெருந்தலைவரின் பெரும்புகழை போற்றுகிறேன் - எடப்பாடி பழனிசாமி

    கல்லாமை எனும் இருள் அகற்றிட கண் துஞ்சாது

    உழைத்திட்டவர் பெருந்தலைவர்; சத்துணவு தந்து

    மாணவர்களின் பசிப்பிணியை போக்கிய சரித்திர நாயகர்

    நிர்வாகத் திறனுக்கு எடுத்துக்காட்டாகவும் எளிமைக்கு இலக்கணமாகவும் திகழ்ந்தவர்; காமராஜரின் பிறந்தநாளில் பெருந்தலைவரின் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

  • பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வைத்திருக்கலாம் - ஜெயக்குமார்
    15 July 2025 11:14 AM IST

    பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வைத்திருக்கலாம் - ஜெயக்குமார்

    உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வைத்திருக்கலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

  • 15 July 2025 11:10 AM IST

    சரோஜா தேவி உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு


    மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் உடல், அவரது தாயார் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்படுகிறது. நடிகை சரோஜா தேவி உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

    சரோஜா தேவியின் உறவினர்கள் கண்ணீர் மல்க அவருக்கு பிரியா விடை அளித்து வருகின்றனர். முன்னதாக சரோஜா தேவி உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

  • 15 July 2025 11:02 AM IST

    ஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு


    சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைகளுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி ஆனி மாத வழிபாட்டுக்காக நாளை (16-7-2025) சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது.


  • 15 July 2025 11:01 AM IST

    சீன அதிபருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு


    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) தற்போதைய தலைவராக சீனா உள்ள நிலையில், அந்த அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கர் சீனா சென்றுள்ளார்.


  • 15 July 2025 10:59 AM IST

    4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு


    மதியம் 1 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நீலகிரி, கோவை, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



1 More update

Next Story