இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025
x
தினத்தந்தி 15 July 2025 9:28 AM IST (Updated: 16 July 2025 9:13 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 15 July 2025 10:58 AM IST

    இந்த வார விசேஷங்கள்: 15-7-2025 முதல் 21-7-2025 வரை

    17-ந் தேதி (வியாழன்)

    * சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * திருவரங்கம் நம்பெருமாள் புறப்பாடு.

    * சமநோக்கு நாள்.

  • 15 July 2025 10:56 AM IST

    விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட பயணிகள்: டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு


    டெல்லியில் இருந்து மும்பைக்கு நேற்று ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கிளம்ப தயராக இருந்தது. பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறியிருந்த நிலையில், விமானம் ஒடுதளம் பகுதிக்கு புறப்பட இருந்தது.

    அப்போது விமானத்தில் இருந்த இரண்டுபயணிகள் காக்பிட் அறை என்று சொல்லப்படக் கூடிய விமானி அறைக்குள் அத்துமீறி நுழைய முயன்று ரகளையில் ஈடுபட்டனர்.


  • 15 July 2025 10:55 AM IST

    நாடாளுமன்றத்தில் ஜூலை 25ம் தேதி பதவியேற்கிறார் கமல்ஹாசன் - மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு


    மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

    தலைவர் கமல்ஹாசன் வருகிற ஜூலை 25-ஆம் தேதி அன்று (25-07-2025) நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • 15 July 2025 10:39 AM IST

    645 பணியிடங்கள்: குரூப்2, 2ஏ தேர்வு அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை அறிவித்துள்ளது. இதன்படி வரும் செப்டம்பர் 28-ம் தேதி குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • தமிழ்நாட்டை முன்னேற்றிய தன்னிகரில்லா தலைவர் -  சீமான்
    15 July 2025 10:11 AM IST

    தமிழ்நாட்டை முன்னேற்றிய தன்னிகரில்லா தலைவர் - சீமான்

    உண்மை, நேர்மை, ஒப்பற்ற ஆட்சி தந்து தமிழ்நாட்டை முன்னேற்றிய தன்னிகரில்லா தலைவர். காமராசர் வழியில் எளிமை, உண்மையாக நின்று மண்ணுக்கும் மக்களுக்கும் தொண்டாற்ற உறுதியேற்போம் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

  • 15 July 2025 10:09 AM IST

    ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்: மக்களிடம் மனுக்களை பெற்றார் முதல்-அமைச்சர்


    பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசு துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்களது இல்லங்களுக்கே சென்று வழங்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' எனும் புதிய திட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளும், நகர்ப்புற பகுதியில் 13 துறைகளின் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன.

    மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் 3 ஆயிரத்து 768 முகாம்களும், ஊரக பகுதிகளில் 6 ஆயிரத்து 232 முகாம்களும் என மொத்தம் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கும் இந்த முகாமில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளதாகவும், தகுதியுள்ள மற்றும் விடுபட்ட பெண்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இந்த முகாம்களில் வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15-07-2025) கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வாண்டையார் திருமண மண்டபத்தில் தொடங்கிவைத்தார். பின்னர் அங்கிருந்த மக்களிடம் மனுக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

    'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளநிலையில் தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 196 இடங்களில் முகாம் நடைபெறுகிறது. தொடர்ந்து, நவம்பர் 30-ந் தேதி வரை இந்த முகாம் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த விவரங்களை https://cmhelpline.tnega.org/ என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 15 July 2025 10:03 AM IST

    நிபா எதிரொலி; தமிழக, கேரள எல்லைகளில் அலர்ட்


    கேரளாவில் ஆண்டுதோறும் சீசன் போல் நிபா வைரஸ் பரவல் இருந்து வருகிறது. குறிப்பாக கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக பாதிப்பு இருந்து வருகிறது. இதில் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.


  • 15 July 2025 10:01 AM IST

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்


    4வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர்களில் தற்போது அணிகள் டெஸ்ட் கிரிக்கெட் ஆடி வருகிறது.


  • 15 July 2025 9:59 AM IST

    கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு


    சேலம் மாவட்டம் அண்ணா பூங்கா முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கல சிலை வைக்கப்பட்டு இருந்தது. இந்த உருவச்சிலையின் மார்பு மற்றும் கால் பகுதியில் மர்ம நபர்கள் கருப்பு பெயின்ட் ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர்.


  • 15 July 2025 9:58 AM IST

    நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் உள்பட ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்


    மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


1 More update

Next Story