இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 15-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 15 Sept 2025 12:53 PM IST
அரசுக்கு நிதி நெருக்கடி: முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம் வீண் - சசிகலா
முதல்-அமைச்சர் வெளிநாடு டூர் சென்றார். ரூ.15,516 கோடி முதலீடு, 17 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்கள். எனக்கு தெரிந்த வகையில், 89 சதவீதம் ஏற்கனவே இங்கே இருக்கும் தொழிற்சாலைகளின் விரிவாக்கம்தான். 11 சதவீதம்தான் புதியது. அமெரிக்காவின் வரி விதிப்பால் திருப்பூர், ஈரோடு ஜவுளி தொழில் முடங்கிப்போய் உள்ளது.
- 15 Sept 2025 12:25 PM IST
எம்மி விருது வென்ற இளம் நடிகர்...வரலாறு படைத்த 15 வயது சிறுவன்
15 வயது சிறுவனான ஓவன் கூப்பர், சிறந்த துணை நடிகருக்கான எம்மி விருதை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்களுக்கான எம்மி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது
- 15 Sept 2025 12:15 PM IST
பேரிஜம் ஏரி செல்ல தடை
திண்டுக்கல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் ஒற்றைக் காட்டு யானை சுற்றித் திரிவதால் இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பேரிஜம் ஏரிப் பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
- 15 Sept 2025 11:48 AM IST
அரசியலில் எதுவும் நடக்கலாம் - ஓ.பன்னீர்செல்வம்
“செங்கோட்டையனுடன் நான் தொடர்ந்து பேசிட்டு இருக்கேன்; அவரும் என்னுடன் பேசிட்டுதான் இருக்கிறார். அரசியலில் எதுவும் நடக்கலாம் என சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். - 15 Sept 2025 11:23 AM IST
“அதிமுக வாக்குகள் தவெகவுக்கு செல்லாது” -ஜெயக்குமார் திட்டவட்டம்
“அதிமுக வாக்குகள் தவெகவுக்கு ஒரு காலத்திலும் போகாது.எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்தி அதிமுகவாக்குகளை பெறலாம் என விஜய் நினைத்தால் அவருக்கு ஏமாற்றமே கிடைக்கும் என்று அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
- 15 Sept 2025 11:20 AM IST
''அவருடன் நடிக்க ஆசை''...ரித்திகா நடிக்க விரும்புவது எந்த ஹீரோவுடன் தெரியுமா?
நடிகை ரித்திகா நாயக், விஷ்வாக் செனின் "அசோக வனம்லோ அர்ஜுன கல்யாணம்" படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர். அடுத்து நானியின் ''ஹாய் நன்னா'' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். தற்போது மிராய் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதற்கிடையில், எந்த ஹீரோவுடன் நடிக்க விருப்பம் என்பதை ரித்திகா நாயக் வெளிப்படுத்தியுள்ளார்.
- 15 Sept 2025 11:01 AM IST
புதிய வக்பு வாரிய சட்ட விதிக்கு இடைக்கால தடை
வக்பு வாரியம் அமைக்க ஒருவர் குறைந்தபட்சம் 5 ஆண்டு இஸ்லாம் மதத்தை பின்பற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் நிபந்தனைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஒருவர் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவரா? என்பதை முடிவு செய்வதற்கான விதிகளை மாநில அரசுகள் வகுக்கும் வரை இத்தடை தொடரும். இருப்பினும், முழுசட்டத்தையும் நிறுத்தி வைக்க முகாந்திரம் இல்லை என குறிப்பிட்டு, சில விதிகளுக்கு மட்டும் தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 15 Sept 2025 10:48 AM IST
காருக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம்
புதுச்சேரி, அண்ணா நகர் வீட்டுவசதி வாரிய அலுவலகம் அருகிலிருந்த காருக்குள் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம்.காருக்குள் அழுகிய நிலையில் இருந்தஆண் சடலத்திலிருந்து தடயங்களை சேகரித்தனர் தடயவியல் நிபுணர்கள். இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 15 Sept 2025 10:33 AM IST
உல்லாசத்திற்கு அழைத்து.. வாலிபர்களின் அந்தரங்கங்களை.. வினோதமாக ரசித்த பெண்; திடுக்கிடும் தகவல்
ரஷ்மி அந்த வாலிபரை, நாம் உல்லாசமாக இருக்கலாம் எனக்கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார். அதை நம்பிய அந்த வாலிபர், கடந்த 1-ந்தேதி ரஷ்மியின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்குள் சென்ற அந்த வாலிபர், ரஷ்மியிடம் நெருங்கி சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த ரஷ்மியின் கணவர் ஜெயேஷ், அதை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.
- 15 Sept 2025 10:30 AM IST
நடுவழியில் நின்ற மோனோ ரெயில்; அந்தரத்தில் சிக்கித் தவித்த பயணிகள்...
இன்று காலை மும்பையில் மோனோ ரெயில் ஒன்று திடீரென தண்டவாளத்தில் நடுவழியில் நின்றது. இதனால் என்ன செய்வதென்று அறியாமல் அந்தரத்தில் சிக்கித்தவித்த பயணிகள் சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டனர்.
















