இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 19 Sept 2025 9:58 AM IST
லலித் மோடியின் சகோதரர் கைது
பாலியல் புகாரில் நாட்டைவிட்டு தப்பியோடிய தொழிலதிபர் லலித் மோடியின் சகோதரர் சமீர் மோடி டெல்லி விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
- 19 Sept 2025 9:58 AM IST
ரோப்கார் சேவை இயங்காது
பழனி முருகன் கோவிலில் இன்று ஒருநாள் மட்டும் ரோப்கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப்கார் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 19 Sept 2025 9:55 AM IST
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-15 மற்றும் 21-15 என்ற நேர்செட்டில் சோச்சுவோங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். சிந்து அடுத்து தென்கொரியாவின் அன் சே யங்கை எதிர்கொள்கிறார்.
- 19 Sept 2025 9:53 AM IST
ஆசிய கோப்பை: லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்யுமா இந்தியா..? ஓமன் அணியுடன் இன்று மோதல்
அபுதாபியில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு அரங்கேறும் கடைசி லீக்கில் நடப்பு சாம்பியனான இந்தியா, கத்துக்குட்டி அணியான ஓமனுடன் ( 'ஏ' பிரிவு) மோதுகிறது.
- 19 Sept 2025 9:49 AM IST
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐ.நா.வில் தீர்மானம் தோல்வி
காசாவில் உடனடியாக போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் தோல்வி அடைந்தது. அமெரிக்கா மீண்டும் தனது வீட்டோ அதிராகத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தோல்வி அடையச் செய்தது.
- 19 Sept 2025 9:47 AM IST
சற்று உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
19.09.2025 ஒரு சவரன் ரூ.81,840 (இன்று)
18.09.2025 ஒரு சவரன் ரூ.81,760 (நேற்று)
17.09.2025 ஒரு சவரன் ரூ,82,160
16.09.2025 ஒரு சவரன் ரூ,82,240
15.09.2025 ஒரு சவரன் ரூ,81,680
14.09.2025 ஒரு சவரன் ரூ.81,760
13.09.2025 ஒரு சவரன் ரூ.81,760
- 19 Sept 2025 9:27 AM IST
ரோபோ சங்கர் மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி இன்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- 19 Sept 2025 9:25 AM IST
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மரணம்: இன்று மதியம் இறுதிச்சடங்கு
சென்னை, வளசரவாக்கம் பகுதியில் நடிகர் ரோபோ சங்கரின் வீடு உள்ளது. அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காகவும், பிரபலங்களின் அஞ்சலிக்காகவும் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு மேல் நடிகர் ரோபோ சங்கரின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 19 Sept 2025 9:25 AM IST
ராசிபலன் (19-09-2025): நீண்டகால எண்ணங்கள் இன்று நிறைவேறும் ராசிகாரர்கள் யார்..?
சிம்மம்
பழைய பிரச்னைகளை தீர்க்க வழி வகை பிறக்கும். சென்ற நாட்களில் ஏற்பட்ட நஷ்டங்களை ஈடுகட்டும் வகையில் வியாபாரம் மிகச்சிறப்பாக நடைபெறும். கூட்டுத் தொழில் செய்து வருபவர்கள் தங்கள் கூட்டாளியிடம் மிகச் சரியாக நடந்து கொண்டு அவர்களை மகிழ்வித்து நீங்களும் மகிழ்வீர்கள். அழகுப் பொருள்கள் வியாபாரம் சூடு பிடிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு















