இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 21 Sept 2025 10:13 AM IST
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் இடமாற்றம்
சென்னை கலெக்டர் அலுவலகத்தை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை ராஜாஜி சாலை, சிங்காரவேலர் மாளிகையில் உள்ள கலெக்டர் அலுவலகம், கிண்டிக்கு மாற்றப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி கிண்டி ரேஸ் கிளப் வளாகத்தில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்ட தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டது.
- 21 Sept 2025 10:01 AM IST
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் ரூ.1.25 லட்சம் கோடி கேட்டு டிரம்ப் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
நீதிமன்றம் என்பது அரசியல் பேரணிகளில் பேசுவதற்கான மேடையோ, விளம்பரத்திற்கான ஒலிபெருக்கியோ அல்ல என்று நீதிபதி கண்டித்துள்ளார்.
- 21 Sept 2025 9:56 AM IST
ஐ.ஐ.டி. காரக்பூர்: பிஎச்.டி. மாணவர் தற்கொலை; ஓராண்டில் 6-வது மரணம்
மேற்கு வங்காளத்தில் உள்ள ஐ.ஐ.டி. காரக்பூரில் ஹர்ஷ்குமார் பாண்டே (வயது 27) என்பவர் ஆராய்ச்சி படிப்பை படித்து வந்திருக்கிறார். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் முனைவர் (பிஎச்.டி.) படிப்பை படித்து வந்த நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் அவருடைய தந்தை மனோஜ் குமார் பாண்டே தொலைபேசி வழியே மகன் பாண்டேவை தொடர்பு கொண்டிருக்கிறார்.
ஆனால், அவருடன் பேச முடியவில்லை. இதனால், ஐ.ஐ.டி.யின் பாதுகாவலர்களை தொடர்பு கொண்டிருக்கிறார். அவர்கள் பாண்டேவின் அறைக்கு சென்றபோது. அறையின் கதவு பூட்டப்பட்டு இருந்துள்ளது. உடனடியாக ஹிஜ்லி போலீசாருக்கு தகவல் சென்றது. அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்தபோது. தூக்கு போட்ட நிலையில் பாண்டே கண்டெடுக்கப்பட்டார்.
- 21 Sept 2025 9:54 AM IST
ரெயில் நிலையங்களில் விற்கப்படும் குடிநீர் பாட்டில் விலை குறைப்பு
சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) மத்திய அரசு மேற்கொண்ட சீர்திருத்தம் செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
- 21 Sept 2025 9:52 AM IST
நாகை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு
புத்தூர் அண்னா சிலை அருகே மாதா கோவில் திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் சாய்ந்த விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- 21 Sept 2025 9:46 AM IST
இளையோர் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸி.பேட்டிங் தேர்வு
இந்தியா - ஆஸ்திரேலியா இளையோர் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
- 21 Sept 2025 9:44 AM IST
சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் 4 மணி நேரம் தாமதம்; பயணிகள் அவதி
கர்நாடக மாநிலம் மைசூரு ரெயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 20608) நேற்று மதியம் 1.05 மணியளவில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.
- 21 Sept 2025 9:42 AM IST
அப்படிப்பட்ட பேட்ஸ்மேன்களில் சாம்சனும் ஒருவர் - கவாஸ்கர் புகழாரம்
இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ஆன சுப்மன் கில்லின் விக்கெட்டை விரைவிலேயே பறிகொடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 45 பந்துகளில் 56 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் அமைந்தார். இருப்பினும் குறைவான ஸ்ட்ரைக்ரேட்டில் (124.4) விளையாடியதை சிலர் விமர்சித்தனர்.
- 21 Sept 2025 9:39 AM IST
அதில் ஒன்றும் தவறில்லை - சூர்யகுமார் யாதவுக்கு இந்திய முன்னாள் கேப்டன் ஆதரவு
பாகிஸ்தான் முன்னாள் வீரரான முகமது யூசுப் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவை 'பன்றி' உடன் ஒப்பிட்டு விமர்சித்தார். அத்துடன் நடுவர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி போட்டியில் வெல்வதற்காக இந்தியா வெட்கப்பட வேண்டும் எனவும் அவர் விமர்சித்திருந்தார். இதனை பார்த்த இந்திய ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தனர்.
- 21 Sept 2025 9:38 AM IST
இந்தியர்கள் தங்கள் பயணத்தை கடைசி நிமிடத்தில் ரத்து செய்துவிட்டு பதறியடித்தபடியே விமான நிலையத்தை விட்டு வெளியேறினர்.
















