இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 21 Sept 2025 11:35 AM IST
விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக உயர்மட்டக்குழு கூட்டம்
விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கவுரவ தலைவர் ஜி.கே.மணி. சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்
- 21 Sept 2025 11:33 AM IST
எச்1-பி விசா கட்டண உயர்வால் அதிகம் பாதிக்கப்படும் நிறுவனங்கள் எவை?
இந்தியர்கள் உள்பட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான 'எச்1-பி' விசா கட்டணத்தை உயர்த்தில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
- 21 Sept 2025 11:29 AM IST
மகாளய அமாவாசை... நீர்நிலைகளில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
நீர்நிலைகள் மற்றும் கோவில் வளாகங்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
- 21 Sept 2025 11:28 AM IST
சர்வதேச டி20 கிரிக்கெட்: ஷகிப் அல் ஹசனின் மாபெரும் சாதனையை சமன் செய்த முஸ்தாபிசுர் ரஹ்மான்
ஆசிய கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
- 21 Sept 2025 11:25 AM IST
எச்1-பி விசா கட்டண உயர்வு; மத்திய அரசு சொல்வது என்ன?
அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கான ஓராண்டு கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து திடீரென ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
- 21 Sept 2025 11:24 AM IST
நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
ஒரே வாரத்தில் இரண்டு முறை நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 21 Sept 2025 11:23 AM IST
லாரி மீது கார் மோதலில் 2 பேர் பலி; ஆசிரியை கனவு நனவான 10 நாளில் பலியான சோகம்
சென்னையில் நடந்த பயிற்சி தொடக்க விழாவிற்கு வந்தபோது விபத்தில் சிக்கி அரசு பள்ளி ஆசிரியை உள்பட 2 பேர் பலியாகினர்.
- 21 Sept 2025 11:22 AM IST
வாரணாசிக்கு சென்ற பிரபல நடிகை...வைரலாகும் புகைப்படங்கள்
தெலுங்கில் 'நெனிந்தே' படத்தில் கதாநாயகியாக நடித்த அதிதி கவுதம், சமீபத்தில் வாரணாசிக்கு சென்றிருக்கிறார். அந்த நினைவுகளை அவர் தனது இன்ஸ்டாகிராமில் தற்போது பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- 21 Sept 2025 11:22 AM IST
இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி- பேசப்போவது என்ன?
இன்று (செப்.21ம் தேதி) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
ஜிஎஸ்டி வரிவிகித மாற்றம் நாளை அமலுக்கு வரும் நிலையில் இன்று மாலை மக்களிடம் உரையாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- 21 Sept 2025 10:17 AM IST
எந்த படத்துக்கு ஆஸ்கர்?...போட்டியில் தனுஷ், அல்லு அர்ஜுன்
ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடும் இந்திய படங்களின் பட்டியலில் தனுஷின் குபேரா, அல்லு அர்ஜுனின் புஷ்பா2 உள்ளிட்ட படங்கள் இடம் பிடித்தன.
















