இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 26.01.2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 26 Jan 2026 12:38 PM IST
கவர்னர் மாளிகை தேநீர் விருந்தை புறக்கணித்தது தமிழ்நாடு அரசு
கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல, கவர்னர் அளிக்கும் விருந்தில் அமைச்சர்கள் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசுக்கு எதிராக கவர்னர் செயல்படுவதை கண்டித்து தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, காங்கிரஸ், விசிக, இடதுசாரி, மதிமுக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கவர்னர் தேநீர் விருந்தில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.
- 26 Jan 2026 12:29 PM IST
விடுமுறை தினம்: திருவண்ணாமலையில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். இந்த நிலையில் குடியரசு தினத்தையொட்டி நேற்று முன்தினம் முதல் இன்று வரையில் தொடர்ந்து 3 நாட்கள் என தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
குடியரசு தின விடுமுறை தினமான இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- 26 Jan 2026 12:25 PM IST
தம்பி விஜய்க்கு அனுபவம் பத்தாது: தமிழிசை சவுந்தரராஜன்
தம்பி விஜய்க்கு கொஞ்சம் அனுபவம் பத்தாது; தனித்து விடப்பட்டதால் அதிமுக சரணடைந்ததாக பேசுகிறாரா என தெரியவில்லை. ஒரு சின்ன தம்பி பேசுவதாக தான் நான் பார்க்கிறேன். விஜய் பேசுவதால் தேசிய ஜனநாயக கூட்டணி குறைந்துபோய்விடாது. நாங்கள் வெற்றி பெறுவோம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
- 26 Jan 2026 11:09 AM IST
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
நாட்டின் 77-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 77-வது குடியரசு தின விழாவையொட்டி டெல்லி கடமைப் பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். ஜனாதிபதி கொடியேற்றியதும் விமானப்படை வானில் ஹெலிகாப்டர்களில் மலர்கள் தூவப்பட்டன.
- 26 Jan 2026 10:58 AM IST
- 'அட்டகத்தி' தினேஷின் ‘கருப்பு பல்சர்’...டிரெய்லர் வெளியீடு
'அட்டகத்தி' தினேஷ் நடித்துள்ள ‘கருப்பு பல்சர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.
- 26 Jan 2026 10:24 AM IST
குடியரசு தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய விருதுகள் என்னென்ன...?
77-வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம் உள்ளிட்ட விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- 26 Jan 2026 10:17 AM IST
தங்கம் விலை அதிரடி உயர்வு... கிராம் ரூ.15 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் - இன்றைய நிலவரம் என்ன..?
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,200-க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.275 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,025-க்கு விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் தினமும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாயும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.375-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 26 Jan 2026 10:03 AM IST
“ஜி.வி.பிரகாஷின் சகோதரிதான் இந்த நடிகையா?’’ - எந்த படத்தில் நடித்திருக்கிறார் தெரியுமா?
திரையுலகில் முதலில் இசையமைப்பாளராக வந்து பின்னர் ஹீரோவாக மாறியவர் ஜி.வி.பிரகாஷ். பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். அவரது சகோதரியும் ஒரு பிரபல நடிகை என்பது உங்களுக்கு தெரியுமா?.
- 26 Jan 2026 10:01 AM IST
"நானும் அவரும்.."- நடிகர் மம்முட்டிக்கு வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்
நடிகர் மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
- 26 Jan 2026 10:00 AM IST
“2-3 ஆண்டுகளில் விவாகரத்து… நண்பர்களை பார்த்து பயந்தேன்” - நடிகை திவி வாத்யா
திருமணம் குறித்த திவி வாத்யாவின் கருத்து சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் திவி , திருமணம் குறித்த தனது பயத்தை வெளிப்படுத்தினார். திருமணத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தார்.
















