இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-10-2025

கோப்புப்படம்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 3 Oct 2025 9:48 AM IST
மணிப்பூர், அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்
மேற்கு வங்கம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- 3 Oct 2025 9:46 AM IST
இந்தியா-சீனா இடையே 26-ந் தேதி முதல் நேரடி விமான சேவை தொடக்கம்
இந்தியா-சீனா இடையே 26-ந் தேதி முதல் நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது.
- 3 Oct 2025 9:44 AM IST
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தின் முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தை கைது செய்ய தனிப்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
- 3 Oct 2025 9:43 AM IST
கோவை-நாகர்கோவில் ரெயில் சேவையில் மாற்றம்
தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- 3 Oct 2025 9:42 AM IST
தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்று ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.110-ம், சவரனுக்கு ரூ.880-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 840-க்கும், ஒரு சவரன் ரூ.86 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 3 Oct 2025 9:18 AM IST
வங்கக்கடலில் புயல் சின்னம்.. 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (வெள்ளிக்கிழமை) காலை கரையை கடக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 3 Oct 2025 9:17 AM IST
ராமநாதபுரத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேராவூர் பகுதியில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 20 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். இந்த விழாவில் பங்கேற்க நேற்று இரவு ராமநாதபுரம் வந்த அவர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று காலை 9.45 மணி அளவில் அங்கிருந்து விழா நடைபெறும் மேடைக்கு வருகிறார். அந்த திடலில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சி அரங்குகளை பார்வையிடுகிறார். பின்னர் மாவட்ட தொழில் மையம், தாட்கோ துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்பட பலருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கலந்துரையாடுகிறார்.
- 3 Oct 2025 9:15 AM IST
போர் நிறுத்த முயற்சிக்கு சிக்கல்..? காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 53 பேர் பலி
பல்லாயிரக்கணக்கான மக்களை கட்டாயமாக வெளியேற உத்தரவிடுவதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது.
- 3 Oct 2025 9:13 AM IST
பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 72 பேர் பலி
நிலச்சரிவில் சிக்கி புதையுண்ட பலரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
- 3 Oct 2025 9:12 AM IST
ராசிபலன் (03-10-2025): வெளிநாடு செல்ல விசா கிடைக்கும் - எந்த ராசிக்காரருக்கு தெரியுமா..?
நல்ல நேரம் காலை: 9-15 to 10-15
நல்ல நேரம் மாலை: 4-45 to 5-45
ராகு காலம் காலை: 10-30 to 12-00
எமகண்டம் மாலை: 3-00 to 4-30
குளிகை காலை: 7-30 to 9-00
கௌரி நல்ல நேரம் காலை: 1-45 to 2-45
கௌரி நல்ல நேரம் மாலை: 6-30 to 7-30
சூலம்: மேற்கு
சந்திராஷ்டமம்: பூசம்
















