இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 4 Oct 2025 12:51 PM IST
12 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 12 மாவட்டங்களில் இன்றும், நாளையும் (அக்.4,5) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 4 Oct 2025 12:47 PM IST
கூட்ட நெரிசல் சம்பவம்: தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் கரூர் வருகை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 13 பேர் எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 4 Oct 2025 12:45 PM IST
கரூர் கூட்ட நெரிசல்: உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்படி நடவடிக்கை - மு.க.ஸ்டாலின்
இனி இப்படி ஒரு பெருந்துயரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே நிகழாமல் தடுக்கவும் ஒன்றிணைவோம் என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- 4 Oct 2025 12:44 PM IST
ஓடிடியில் ’மிராய்’...தேஜாவின் பிளாக்பஸ்டர் படத்தை எதில், எப்போது பார்க்கலாம்?
தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியான பேண்டஸி ஆக்ஷன் சாகசப் படமான மிராய் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.கார்த்திக் கட்டம்னேனி இயக்கிய இந்தப் படம் ரூ. 150 கோடிக்கு மேல் வசூலித்தது.
- 4 Oct 2025 12:16 PM IST
‘உண்மை விரைவில் வெளியே வரும்’ - டேராடூனில் ஆதவ் அர்ஜுனா பேட்டி
விமான நிலையத்தில் ஆதவ் அர்ஜுனாவிடம் செய்தியாளர் கரூர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்.
- 4 Oct 2025 12:13 PM IST
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ்
தற்போது வரை வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 2வது இன்னிங்சில் 27 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 66 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டும். சிராஜ். குல்தீப் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னும் 220 ரன்கள் பின்னிலையில் உள்ளது.
- 4 Oct 2025 12:01 PM IST
விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை மேம்படுத்த பரிந்துரை?
விஜய்க்கு இசட் (z) பிரிவு பாதுகாப்பு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள ஒய் (Y) பிரிவு பாதுகாப்பை, Y+ அல்லது அதற்கு மேலான Z பிரிவு பாதுகாப்பாக அதிகரிக்க சி.ஆர்.பி.எப். தரப்பிலிருந்து பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- 4 Oct 2025 11:15 AM IST
கடல் மாநாடு: படகில் சென்று பார்வையிட்ட சீமான்
ஏற்கனவே மரங்கள் மாநாடு, கால்நடை மாநாடு நடத்தியுள்ள நிலையில், தற்போது சீமான் கடல் மாநாடு நடத்த உள்ளார்.
- 4 Oct 2025 11:12 AM IST
நாமக்கல் தவெக மாவட்டச் செயலாளர் தலைமறைவு - கைது செய்ய 2 தனிப்படைகள் அமைப்பு
தவெகவின் நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் தலைமறைவானார். இந்நிலையில் அவரை கைது செய்ய காவல் ஆய்வாளர் கபிலன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
- 4 Oct 2025 10:51 AM IST
விஜய் என்ன தவறு செய்தார்?: கரூர் விவகாரத்தில் அவருக்கு துணையாக நான் நிற்பேன் - எச். ராஜா
திமுகவின் கரை வேட்டி கட்டாத உறுப்பினர்களாக கரூர் காவல்துறை அதிகாரிகள் உள்ளனர் என எச். ராஜா தெரிவித்துள்ளார்.
















