இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-07-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 7 July 2025 5:36 PM IST
நடுக்கடலில் தத்தளித்த 4 இந்திய மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை
நடுக்கடலில் தத்தளித்த 4 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட 4 மீனவர்களும் இலங்கையின் திகோவிட்டா துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
- 7 July 2025 4:23 PM IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 14-ம் தேதி நாள் முழுவதும் நடை அடைப்பு
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருள இருப்பதால், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 14-ந்தேதி நாள் முழுவதும் நடை அடைக்கப்படுகிறது. முந்தைய நாளான 13.07.2025 மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின் 14.07.2025 இரவு அம்மனும் சுவாமியும் திருக்கோவில் வந்து சேரும் வரை நடைசாற்றப்பட்டிருக்கும்.
- 7 July 2025 3:45 PM IST
போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனு மீது நாளை உத்தரவு ;சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு
- 7 July 2025 3:08 PM IST
- ஜூலை 9ம் தேதி ஆட்டோக்கள்,பேருந்துகள் ஓடாது
- நாடு தழுவிய அளவில் வரும் ஜூலை 9ம் தேதி வேலை நிறுத்தம் அறிவிப்பு
- ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பேருந்து - ஆட்டோ ஓட்டுநர்கள் , தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என அறிவிப்பு
- விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் அறிவிப்பு
- மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து பந்த் நடத்தப்படுவதாக அறிவிப்பு
- 7 July 2025 2:39 PM IST
- திருச்செந்தூர் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை
- "திருச்செந்தூர் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை, இன்னும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு
- 2025 இறுதிக்குள் 5 கோவில்களில் விரைவு தரிசனம், ஆன்லைன் தரிசனத்திற்கு ஏற்பாடு
- திருச்செந்தூர் குடமுழுக்கு பக்தர்கள் மாநாடு, பாஜகவினரின் மாநாடு அல்ல" - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
- 7 July 2025 2:01 PM IST
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர். இதேபோன்று திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் ஆகியோரும் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியை காண்பதற்காக திரளான பக்தர்களும் வந்து பங்கேற்றனர். இந்நிலையில், திருச்செந்தூர் கோவிலில் பிற்பகல் 2 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.












