இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-01-2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 8 Jan 2026 10:28 AM IST
தமிழகத்தில் சந்திக்காமல் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பதில்
சசிகலா, ஓ பன்னீர் செல்வத்திற்கு அதிமுகவில் இடம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- 8 Jan 2026 10:25 AM IST
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்கும் பணி : மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை ஆலந்தூர், நசரத்புரத்தில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைத்தார்.
- 8 Jan 2026 10:02 AM IST
ஆஷஸ் கடைசி டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
- 8 Jan 2026 9:58 AM IST
பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது: இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும், இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
- 8 Jan 2026 9:53 AM IST
ஸ்டெர்லைட் நிறுவன உரிமையாளர் அனில் அகர்வாலின் மகன் மரணம்
வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ் அகர்வால் பனிச் சறுக்கில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
- 8 Jan 2026 9:52 AM IST
திருப்பரங்குன்றம் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராம ரவிக்குமார் கேவியட் மனு தாக்கல்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
- 8 Jan 2026 9:50 AM IST
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்
முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் கணக்கெடுக்கும் பணிகள் ஏப்ரல் 1-ந் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- 8 Jan 2026 9:45 AM IST
விசா சேவை நிறுத்தம்: இந்தியா - வங்காளதேசம் தூதரக ரீதியான பதற்றம் அதிகரிப்பு
வங்காளதேசத்தில் இந்து இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
- 8 Jan 2026 9:44 AM IST
ஜனநாயகன் திரைப்பட சான்று பிரச்சினையில் விஜய்க்கு காங்கிரஸ் எம்.பி ஆதரவு
விஜய் அரசியலில் கால் பதித்துள்ள நிலையில், 'ஜனநாயகன்' படத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி அரசியல் ரீதியாக வழங்கப்படும் அழுத்தம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.
- 8 Jan 2026 9:42 AM IST
பொங்கலுக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் அறிவித்த தெற்கு ரெயில்வே.. தொடங்கியது முன்பதிவு
சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
















