இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-01-2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 8 Jan 2026 11:49 AM IST
தகவல் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தகவல் தொழில்நுட்பத்தை சமூக முன்னேற்றத்திற்கான கருவியாக பார்க்க வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- 8 Jan 2026 11:47 AM IST
ஜனநாயகன் வெளியீட்டில் சிக்கல்: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த ஜோதிமணி எம்.பி.
அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டதாக ஜோதிமணி எம்.பி. தெரிவித்தார்.
- 8 Jan 2026 11:46 AM IST
கடைசி படம் என்பதால் விஜய் பில்டப் செய்கிறார்: சபாநாயகர் அப்பாவு
‘ஜனநாயகன்’ விவகாரத்தை தேவையில்லாமல் விஜய் பெரிதாக்குவதாக சபாநாயகர் அப்பாவு சாடியுள்ளார்.
- 8 Jan 2026 11:25 AM IST
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை
சென்னையில் நாளை மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
- 8 Jan 2026 11:19 AM IST
நோபல் பரிசு எனக்கு ஒரு பொருட்டல்ல: டிரம்ப் விரக்தி
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். தனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார். இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதல் உள்ளிட்ட 8 போர்களை நிறுத்தியிருப்பதாகவும், தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் அவ்வப்போது பேட்டிகளில் தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வந்தார்.
ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த டிரம்ப், தற்போது நோபல் பரிசு எல்லாம் தனக்கு ஒரு பொருட்டல்ல என்று பேசியுள்ளார்.
- 8 Jan 2026 11:18 AM IST
பாமக சார்பில் கூட்டணி பேச அன்புமணிக்கு தகுதியில்லை - ராமதாஸ்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அன்புமணி தரப்பினர் நேற்று சந்தித்தனர். அப்போது. அதிமுக-பாமக கூட்டணி அமைத்துள்ளதாக கூட்டாக அறிவித்தனர். ஏற்கெனவே கட்சி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அன்புமணி தரப்பினர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.இந்த கூட்டணி குறித்து ராமதாசின் கருத்து என்ன என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.
- 8 Jan 2026 11:13 AM IST
ஆட்சி அதிகாரத்தில் பங்கு: இம்மாத இறுதிக்குள் தமிழகம் வரும் ராகுல் காந்தி, பிரியங்கா
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழகம் வருகை தர இருப்பதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
- 8 Jan 2026 11:12 AM IST
‘ஜனநாயகன்’ போலவே ‘பராசக்தி’க்கும் தணிக்கை சிக்கலா?
ஜனநாயகன் படத்தை போலவே, பராசக்தி படத்துக்கும் இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.
- 8 Jan 2026 10:56 AM IST
அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு இடம்.. ஓபிஎஸ்-க்கு இடமில்லை - எடப்பாடி பழனிசாமி சூசகம்
எடப்பாடி பழனிசாமி கூறுவதை பார்க்கும்போது, டிடிவி தினகரனை அதிமுக கூட்டணியில் இணைக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாகவே தெரிகிறது
- 8 Jan 2026 10:42 AM IST
திருவண்ணாமலை கோவிலில் தீப மை பிரசாதம் விற்பனை தொடக்கம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில், திருமஞ்சன கோபுரம் அருகே தீப மை விற்பனை தொடங்கியது.
















