இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 10 Dec 2025 9:14 AM IST
விஜய் தலைமையில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
கட்சி நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய், நாளை அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
- 10 Dec 2025 9:13 AM IST
நீலகிரியில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி அரசு அரசாணை வெளியீடு
நீலகிரியில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- 10 Dec 2025 9:12 AM IST
2வது நாளாக முழு கொள்ளளவில் நீடிக்கும் புழல் ஏரி
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகளில் இருந்து அவ்வப்போது நீர் திறக்கப்பட்டு வருகிறது.
- 10 Dec 2025 9:10 AM IST
தேர்தலில் போட்டியிட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விருப்பமனு வினியோகம்; இன்று தொடங்குகிறது
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விருப்பமனு வினியோகத்தை இன்று தொடங்குகிறது.
- 10 Dec 2025 9:08 AM IST
திமுகவின் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' இன்று தொடக்கம்
திமுகவினரின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி எனும் பிரசாரம் இன்று தொடங்க உள்ளது. தேனாம்பேட்டையில் பகுதிச்செயலாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதனைத்தொடர்ந்து வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் திமுகவின் பிரசாரம் மாநிலம் முழுவதும் இன்று தொடங்க உள்ளது.
- 10 Dec 2025 9:07 AM IST
அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம்- இன்று நடக்கிறது; முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறதா?
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) சென்னையில் நடக்கிறது.
- 10 Dec 2025 9:06 AM IST
இன்றைய ராசிபலன் (10-12-2025): எதிர்பார்த்த காரியம் நிறைவேறும் நாள்..!
ரிஷபம்
வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர். குடும்பத் தலைவிகளின் தேவை நிறைவேறும். புதிய நண்பர்கள் கிடைப்பர். எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். ஆரோக்கியத்தில் பிரச்சினை இல்லை.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்













