இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-10-2025


தினத்தந்தி 12 Oct 2025 9:41 AM IST (Updated: 12 Oct 2025 8:04 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 12 Oct 2025 10:01 AM IST

    பேச்சுவார்த்தை தோல்வி: 4-வது நாளாக தொடரும் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம்


    சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது.


  • 12 Oct 2025 9:58 AM IST

    நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி நாகேந்திரன், கல்லீரல் பாதிப்பால் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை செய்வது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது தங்கள் தரப்பில் ஒரு டாக்டரை அனுமதிக்க வேண்டும் என நாகேந்திரனின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை நீதிபதி சதீஷ்குமார் நிராகரித்தார். பின்னர் அவரது உத்தரவின்பேரில் மாதவரம் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு தீபா மேற்பார்வையில் டாக்டர் சாந்தகுமார் தலைமையில் ஸடான்லி மருத்துவ கல்லூரி தடயவியல் துறை தலைவர் பிரியதர்ஷினி, டாக்டர்கள் நாராயணன், ராஜேஷ் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்து முடித்தனர்.

    இதற்கிடையில் வியாசர்பாடி சத்யமூர்த்தி நகரில் உள்ள நாகேந்திரன் வீட்டில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் நாகேந்திரன் உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்படி ஸ்டான்லி மருத்துவமனையில் நாகேந்திரனின் உடல் அவரது மகன் அஸ்வத்தாமனிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், வியாசர்பாடியில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    குடும்பத்தினர் அஞ்சலிக்கு பிறகு மதியம் 2 மணிக்கு வியாசர்பாடி முல்லை நகர் சுடுகாட்டில் உடல் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 12 Oct 2025 9:50 AM IST

    இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகும் மாவட்டங்கள் எவை..?


    வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 12 Oct 2025 9:48 AM IST

    ஓசூர்: 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்; 4 பேர் பலி


    ஒசூரில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் 4 பேர் பலியானார்கள். ஒசூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வாகனம் மீது, பிக்கப் வேன் ஒன்று மோதியது. இந்த சம்பவத்தின்போது, அந்த வழியே வந்த கார் ஒன்று அதன் பின்னால் மோதி விபத்திற்குள்ளானது.


  • 12 Oct 2025 9:46 AM IST

    6 மாவட்டங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்


    காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது.




  • 12 Oct 2025 9:44 AM IST

    தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று தேர்வு; 2.36 லட்சம் பேர் பங்கேற்பு


    தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை 2 லட்சத்து 36 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 12 Oct 2025 9:42 AM IST

    ராசிபலன் (12-10-2025): சுப காரியம் கைகூடும் - எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா..?


    ரிஷபம்

    சென்ற இடமெல்லாம் செல்வாக்கு கூடும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம்

1 More update

Next Story