இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 13 Jun 2025 8:47 AM IST
டெஸ்ட் கிரிக்கெட்; 43 ஆண்டு கால சாதனையை முறியடித்த கம்மின்ஸ்
தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் அவர் 43 ஆண்டு கால சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.
- 13 Jun 2025 8:45 AM IST
விமான விபத்து: ஆமதாபாத் செல்லும் பிரதமர் மோடி
நெஞ்சை பிளக்கும் வகையில் நடந்த இந்த விமான விபத்து, நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளநிலையில் பிரதமர் நரேந்திர மோடி விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட இன்று குஜராத்தின் ஆமதாபாத்திற்கு செல்கிறார். காலை 8 மணிக்கு அவர் ஆமதாபாத் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 13 Jun 2025 8:43 AM IST
ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பதற்றம்
ஈரானின் இதயமாக கருதப்படும் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரானின் தெஹ்ரானில் மக்கள் குண்டுவெடிப்பு சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர்.
அந்நாட்டு அரசு தொலைக்காட்சி குண்டுவெடிப்பை உறுதி செய்துள்ளது. என்ன நடந்தது என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
- 13 Jun 2025 8:42 AM IST
விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழப்பு - ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேரும் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- 13 Jun 2025 8:41 AM IST
ரிஷபம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா











