இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 13 Dec 2025 9:41 AM IST
டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு; மக்களுக்கு பெரும் பாதிப்பு
காற்று மாசுபாட்டால் மக்களின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு, சுவாச கோளாறுகளும் அதிகரித்து காணப்படுகிறது.
- 13 Dec 2025 9:40 AM IST
இந்தியா வந்தடைந்தார் கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி.. ரசிகர்கள் உற்சாகம்
14 ஆண்டுக்கு பிறகு மெஸ்சி இந்தியாவுக்கு வந்துள்ளதால் கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
- 13 Dec 2025 9:38 AM IST
திருவண்ணாமலையில் மகா தீபக் காட்சி இன்றுடன் நிறைவு
தீபத் திருவிழா தொடங்கியது முதல் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
- 13 Dec 2025 9:37 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
- 13 Dec 2025 9:12 AM IST
வங்காளதேசத்தில் இருந்து சிகிச்சைக்காக விமானத்தில் சென்னை வந்த பெண் நடுவானில் உயிரிழப்பு
வங்காளதேசத்தின் டாக்காவை சேர்ந்த பெண் அக்லிமா அக்தர் (வயது 32). இவருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அப்பெண் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக நேற்று விமானத்தில் அழைத்து வரப்பட்டார்.
- 13 Dec 2025 9:10 AM IST
கண்டெய்னர் லாரிகள் 4-வது நாளாக வேலை நிறுத்தம்: அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு
கண்டெய்னர் லாரிகள் 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்துள்ளனர்.
- 13 Dec 2025 9:06 AM IST
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டம்
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
- 13 Dec 2025 9:05 AM IST
கேரள உள்ளாட்சி தேர்தல்; வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 244 மையங்களில் நடக்கிறது.
- 13 Dec 2025 9:03 AM IST
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டால், எளிதில் வர்த்தகம் செய்வது மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும்.
- 13 Dec 2025 9:02 AM IST
இன்றைய ராசிபலன் (13-12-2025): முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் நாள்..!
கும்பம்
தொழிலில் தேக்கம் குறையும். விவசாயிகள் குத்தகை எடுப்பர். தம்பதிகளுக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் ஆர்வக் கோளாரை கவனியுங்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். விற்பனை பிரதிநிதிகளுக்கு ஆர்டர்கள் குவியும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்


















