இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 16 Dec 2025 9:06 AM IST
முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலம் ஆகிறது தமிழகம்..!
தமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிப்பதை எதிர்நோக்கி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
- 16 Dec 2025 9:05 AM IST
வேளச்சேரி-பரங்கிமலை இடையே சரக்கு ரெயிலை இயக்கி சோதனை
வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரையிலான 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த நவம்பர் 7-ந்தேதி 10 பெட்டிகளுடன் சரக்கு ரெயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. 2-வது முறையாக நேற்று சரக்கு ரெயில் பெட்டிகளுடன் இணைத்து இயக்கி சோதனை நடத்தப்பட்டது. அப்போது தண்டவாளம் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
- 16 Dec 2025 9:01 AM IST
காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ்காரர் வீர மரணம்
காஷ்மீரின் உதம்ப்பூர் மாவட்டம் சோஹன் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் நேற்று இரவு காஷ்மீர் போலீசாரும், மத்திய பாதுகாப்புப்படையினரும் தீவிர சோதனை நடத்தினர்.
- 16 Dec 2025 8:59 AM IST
நாட்டின் ஏற்றுமதி அதிகரிப்பு; வர்த்தக பற்றாக்குறை குறைந்தது
அமெரிக்காவை தவிர்த்து இந்திய பொருட்களுக்கான சந்தையை கண்டெடுத்ததே இந்த மாற்றத்திற்கு காரணம்.
- 16 Dec 2025 8:58 AM IST
காற்று மாசால் திணறும் டெல்லி.. சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கை மாதத்துக்கு 2 தடவை விசாரிப்போம் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கூறியிருந்தது.
- 16 Dec 2025 8:57 AM IST
உ.பி.: கடும் பனி மூட்டத்தால் அடுத்தடுத்து மோதி தீப்பற்றி எரிந்த வாகனங்கள் - 4 பேர் பலி
தலைநகர் டெல்லி உத்தரபிரதேசத்தின் ஆக்ரா இடையேயான எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று பயங்கர விபத்து ஏற்பட்டது. கடும் பனிமூட்டம் காரணமாக போதிய வெளிச்சமின்மையால் சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. உத்தரபிரதேசத்தின் மதுரா அருகே இந்த விபத்து ஏற்பட்டது. 2க்கும் மேற்பட்ட பஸ்கள், கார்கள், வேன்கள் என அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
- 16 Dec 2025 8:56 AM IST
தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன...? - நிதி அமைச்சகம் பரபரப்பு விளக்கம்
நம் நாட்டில் அணிகலன்களாகவும், மிகப்பெரிய சொத்தாகவும் இருப்பது தங்கம். இந்த மஞ்சள் உலோகம் மீது காதல் கொள்ளாதவர்களே இருக்க முடியாது. இத்தனை சிறப்புடைய தங்கத்தின் விலைதான் தற்போது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- 16 Dec 2025 8:55 AM IST
விபத்துகளை தடுக்க தேசிய அளவிலான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சுப்ரீம் கோர்ட்டு விருப்பம்
விபத்துகளை தடுக்க தேசிய அளவிலான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சுப்ரீம் கோர்ட்டு விருப்பம் தெரிவித்துள்ளது.
- 16 Dec 2025 8:53 AM IST
இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷிய அதிபர் புதின் கையெழுத்து
இந்தியா-ரஷியா இடையேயான ராணுவ ஒப்பந்தம் இந்த ஆண்டு தொடக்கத்தில் கையெழுத்தானது. இதற்கான சட்டம் ஒன்று ரஷிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தளவாட ஆதரவின் பரஸ்பர பரிமாற்ற ஒப்பந்தம் எனப்படும் இந்த சட்டத்துக்கு கீழவை கடந்த 2-ந்தேதியும், மேலவை 8-ந்தேதியும் ஒப்புதல் வழங்கியது.
- 16 Dec 2025 8:52 AM IST
மெக்சிகோ: சிறிய ரக விமானம் கட்டிடத்தில் மோதி விபத்து - 7 பேர் பலி
வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ. இந்நாட்டின் அபல்கோ நகரில் இருந்து நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் 7 பேர் பயணித்தனர்.
















