இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 19 Dec 2025 11:14 AM IST
தூய்மைப்பணியாளர்களுக்கு கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறை
சென்னையின் 200 வார்டுகளிலும் தூய்மைப்பணியாளர்களுக்கு, கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறை அமைக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 19 Dec 2025 11:12 AM IST
சென்னை சிவானந்தம் சாலையில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் கைது - அண்ணாமலை கண்டனம்
செவிலியர்கள் கேட்பது, ஆட்சிக்கு வருவதற்காக திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத்தான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- 19 Dec 2025 11:07 AM IST
புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையங்களுக்கு மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும் - ராமதாஸ்
புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையங்களுக்கு வரலாற்றில் இடம் பெற்ற மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
- 19 Dec 2025 11:06 AM IST
நாடு முழுவதும் விமானத்தில் லேசர் ஒளி அடித்ததாக 534 சம்பவங்கள் பதிவு
ஆகாயத்தில் பயணிகளை சுமந்து செல்லும் வெள்ளை காகம் என்று அழைக்கப்படும் விமானம் இரவு நேரங்களில் தரையிறங்குவதற்காக தாழ்வாக பறக்கும்போது அதன்மீது லேசர் ஒளி அடிக்கும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து வருகிறது.
- 19 Dec 2025 11:04 AM IST
கான்வே இரட்டை சதம்: 575 ரன்களுக்கு டிக்ளேர் செய்த நியூசிலாந்து
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நியூசிலாந்து அணி வீரர்கள் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர்.அந்த அணியில் கான்வே, ரச்சின் ரவீந்திரா இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
பொறுப்புடன் விளையாடி கான்வே இரட்டை சதமடித்து அசத்தினார். ரச்சின் ரவீந்திரா அரைசதமடித்து 77 ரன்களில் ஆட்டமிழந்தார். கான்வே 227 ரன்களில் வெளியேறினார். இறுதியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 575 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
- 19 Dec 2025 11:02 AM IST
விசுவநாதம் பிள்ளை நினைவு தினம்; அவரது புகழை போற்றி வணங்குவோம் - நயினார் நாகேந்திரன்
தமிழுக்காக தன்னை அர்ப்பணித்த விசுவநாதம் புகழை போற்றி வணங்குவோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
- 19 Dec 2025 11:01 AM IST
சென்னை மாநகராட்சியின் கட்டுமான வழிகாட்டுதல்களை பின்பற்றிட வேண்டும்: மீறினால் அபராதம்
சென்னையில் வருகிற 22ம் தேதி முதல் இவ்வழிகாட்டுதல்கள் கடுமையாக அமல்படுத்தப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
- 19 Dec 2025 10:59 AM IST
ரோடு ஷோ: இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
கரூரில் த.வெ.க. விஜய் கலந்துக் கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரோடு ஷோ உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டன.
இந்நிலையில் ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு விரைவில் இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் நெறிமுறைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் மனு தாக்கல் செய்யலாம் என்றும், வழிகாட்டு நெறிமுறைகளை அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 19 Dec 2025 10:53 AM IST
சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையை மெட்ரோவிடம் ஒப்படைக்க விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
- 19 Dec 2025 10:16 AM IST
ரெயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே 'ரிசர்வேஷன் சார்ட்: பயணிகளுக்கு இனிப்பான செய்தி
சிரமங்களை தவிர்க்கும் விதமாக சராசரியாக 10 மணி நேரத்திற்கு முன்பே சார்ட் லிஸ்ட் வெளியிடும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
















